யாரு இல்லேன்னாலும் அவரு வேணும்! -விஜய்யின் நல்ல முடிவு
இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு நான் கடவுள் ராஜேந்திரன் நினைச்சிருந்தா அவர் நடிகராகியிருக்கவே முடியாது. தான் இயக்கும் படங்களில் வேறொரு டிபார்ட்மென்ட் பணியாளராக இருந்தவரை, நான் கடவுள் படத்தில் நடிக்க வைத்து வேறொரு ரூட் போட்டுக் கொடுத்துவிட்டார் டைரக்டர் பாலா. அதற்கப்புறமும் முகத்துல டெரர் காண்பித்தே பிழைத்து வந்த ராஜேந்திரனுக்கு இப்போது ‘இன்னும் மேலே…’ அந்தஸ்து. அதுவும் விஜய்யின் திருவாயால்!
தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஜய். படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தின் கதை விவாதத்தின் போதுதான் விஜய் அந்த ஆசையை சொன்னாராம். ‘படத்துல வருதே.. அந்த கேரக்டர். அதுல நான் கடவுள் ராஜேந்தரனை நடிக்க வைங்க’ என்றாராம். அது மட்டுமல்ல, இனி வரும் என் படங்களில் எல்லாம் ராஜேந்திரனுக்கு கேரக்டர் கொடுத்துரணும் என்று நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகவும் தகவல்.
வடிவேலு இல்லேன்னா… விவேக் இல்லேன்னா… என்கிற கேள்விகளையெல்லாம் மாற்றியிருக்கிறது காலம். அதுவே விஜய் படத்தை பொருத்தவரை பெருத்த விசேஷம்தான். இப்போதெல்லாம் ஸ்கிரீனில் ராஜேந்திரனின் தலையை பார்த்தாலே லபோ திபோவென சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
விஜய்யும் சிரித்து மகிழ்ந்ததால் வந்த அந்தஸ்து இது.