சிம்புவால் கவிழ்ந்த சொம்பு? விஜய் மில்டன் படத்திலிருந்து டிஆர் கல்தா!

“தன்மான சிங்கம் டிராஜேந்தரை, இப்படி அவமான சின்னம் ஆக்கிவிட்டாரே அவரது மகன்?” என்று அச்சச்சோவாகிறது கோடம்பாக்கம். பெற்ற கடமைக்காக அவரும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் இப்படியொரு ஷாக். பத்து எண்றதுக்குள்ள படத்தையடுத்து விஜய் மில்டன் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க முன் வந்தாரல்லவா? அதில் இப்போது டி.ஆர் இல்லையாம். ஐயய்யோ… அவரை வச்ச இடத்துல இன்னொருத்தரை வச்சுப் பார்க்க, கோடம்பாக்கத்திலே நடிகரே இல்லையே?

ஏனில்லை? அவர் யாரென்பதுதான் இந்த செய்தியின் கடைசி முடிச்சு! அதற்கு முன் டி.ஆரும் விஜய் மில்டனும் இணைந்ததெப்படி? பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு முன்பே டிஆரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கதான் நினைத்திருந்தார் விஜய் மில்டன். ஒரு அலேக் பலேக் தங்கச்சி கதையுடன் டிஆர் வீட்டு வாசலை தட்ட, ஒரிஜனல் தங்கச்சி வந்தால் கூட, “ஓரமா உட்காந்துட்டு ஒண்ணும் பேசாம ஓடிப்போயிடு” என்று சொல்லிவிடுகிற டிஆர், சினிமா தங்கச்சி என்றால் சும்மாயிருக்க மாட்டாரே? “சொல்லுங்க கோலிசோடா” என்று கூறிவிட்டு உட்கார்ந்துவிட்டாராம். இவர் கதை சொல்ல சொல்ல, குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது தீர்த்துவிட்டாராம்.

“யோவ்… நானும் எவ்ளோ தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை சொல்லிட்டேன். எங்க வீட்ல வெள்ளம் வர வச்சுட்டியேய்யா…” என்று மேலும் இரு டம்ளர் கண்ணீர் வடித்தவர், “யோவ்… என்ன ஆனாலும் சரி. இதுல நான்தான் ஹீரோ” என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால் காலக்கொடுமை, விக்ரம் குறுக்கே வந்து சுமார் பதினைந்து கோடி அநாமத்தாக கரைந்தது.

போகட்டும்… இப்போதைய நிலைமை என்ன? கடந்த சில தினங்களாக டிஆர் அண்டு பேமிலிக்கு ஏற்பட்டிருக்கும் அந்தஸ்து சரிவில், விஜய் மில்டனின் கதையும் சேர்ந்து உருள… தன் படத்தின் ஹீரோவை அதிரடியாக மாற்றிவிட்டார். இப்போது டி.ஆர் வேடத்தில் நடிக்கவிருக்கும் அந்த சிறந்த நடிகர், நம்ம தேவயானி புருஷர் ராஜகுமாரன்!

அட்றா சக்க… அட்றா சக்க!

2 Comments
  1. GM says

    Someone is doing copy/paste all your articles on Tamilmanam blog aggregator. Stop it please.

    1. admin says

      தமிழ்மணம் பிளாக்தான் திருடி போட்றாங்க. அதை கூட புரிஞ்சுக்க முடியாமல் ஒரு காமென்ட்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நண்பர்களுக்காக ஸ்டோரி கடை ஓப்பன்… சரக்கு புகழ் ராஜேஷ் பரபர!

கடவுள் இருக்காண்டா கொமாரு! சரக்கு புகழ் ராஜேஷின் அடுத்த படம் இது. (இதையும் சுருக்குனீங்கன்னா கிக்குன்னு வரும்) எஸ்.எம்.எஸ் படத்தில் இவர் திறந்து வைத்த டாஸ்மாக் உளறல்,...

Close