விஜய் ரசிகன் சங்கிலித் திருடனா? அவமானப்படுத்திய மெட்ரோ திரைப்படம்! கனடாவிலிருந்து ஒரு ரசிகரின் கண்ணீர் கடிதம்!
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் மெட்ரோ என்ற படத்திற்கு தமிழ்நாட்டில் என்ன வரவேற்போ தெரியாது. ஆனால் கனடாவிலிருக்கும் விஜய் ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு, “அண்ணா இதை விடக்கூடாது. எனக்காக இந்த செய்தியை உங்க இணையதளத்தில் வெளியிடுங்க” என்று கண்ணீர் மல்க ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். கூடவே அவர் சில ஸ்கிரீன் ஷாட்டுகளையும் நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இப்படியொரு வெறிபிடித்த ரசிகரா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இனி அவரது கடிதம்-
அண்ணா வணக்கம்.
என் பெயர் அகமது. இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்வதை பெருமையாக நினைப்பவன். அப்படிப்பட்ட எனக்கு மெட்ரோ படத்தை பார்த்த நிமிஷத்திலிருந்து பைத்தியம் பிடிக்காத குறை. படத்தில் வரும் ஒரு கேரக்டர் சாலையில் வரும் பெண்களிடம் அவர்கள் அணிந்திருக்கும் சங்கிலி பறிக்கும் திருடனாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த திருடன் விஜய் ரசிகனாக காட்டப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
படத்தில் ஒரு இடத்தில் போலீஸ் அவனிடம் கைரேகை பதிய சொல்லும் காட்சி வருகிறது. அப்போது அவனுக்கு வைக்கப்பட்டிருக்கும் குளோஸ் அப் காட்சியில், அவனும் விஜய் அண்ணாவும் நிற்பது போல ஒரு புகைப்படம் சுவற்றில் தொங்குகிறது. அந்த படம் கண்ணில் பட வேண்டும் என்று திட்டமிட்டே அந்த குளோஸ் அப் வைக்கப்பட்டுள்ளது. வேறொரு காட்சியில் சுவரில் வேறொரு இடத்தில் தொங்கும் அந்த புகைப்படம் குளோஸ் அப் எடுக்கும் போது மட்டும் அங்கு பின்னால் தெரிவது போல வைக்கப்பட்டுள்ளது ஏன்?
விஜய் ரசிகர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த படத்தின் டைரக்டர் திட்டமிட்டு செய்திருப்பார் போல தோன்றுகிறது. அந்த காட்சிகளை நானே ஸ்கிரீன் ஷாட் எடுத்து உங்களுக்கு அனுப்பியுள்ளேன். உலகம் முழுவதும் இருக்கிற விஜய் ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டும் என்பதற்காகதான் உங்கள் இணைய தளத்திற்கு அனுப்பியுள்ளேள். தயவு செய்து இதை வெளியிடுங்கள் அண்ணா.
இப்படிக்கு
அகமது.
இதுதான் அவர் அனுப்பியுள்ள கடிதம். விஜய் ரசிகர்களுக்கு மெட்ரோ டைரக்டர் சொல்லப் போகும் பதில் என்ன? நமக்கு விவரித்தால் அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.
விஜய் ரசிகனை திருடனாக சித்தரித்ததற்கு இப்படி கொந்தளிக்கும் அந்த விஜய் ரசிகர் அகமது, படத்தை திருட்டு வீசிடியில் பார்த்துள்ளார். அது உங்களுக்கு திருட்டாக படவில்லையா அந்தணன் சார்? உப்படியான அட்டென்ஷன் சீக்கர்களின் பொறியில் விழுந்து ஒரு படைப்பாளியை தெருவுக்கு கொண்டுவராமல், தயவுசெய்து மேற்படி திருடனின் தகவல்களை இங்கு பகிரவும். கனடா போலீசில் பிடித்து கொடுப்போம். உவர்கள் எல்லாம் எப்பிடி கனடா போனார்களோ தெரியவில்லை. அந்த நாடுகளில் இண்டலெக்சுவல் ரைட்டுக்களும் காப்பி ரைட்டுகளும் நன்கு மதிக்கப்படுகின்றன. அங்கு போயும் உப்பிடி திருட்டு விசிடியில் படம் பாப்பது நாயை கொண்டாந்து நடுவீட்டில வைத்தாலும் அது என்னவோ செய்யுமாம் என்பதை போல இருக்கு.