நான் அஜீத் ரசிகன்! வில்லங்கத்தில் சிக்கிய விஜய் மகன்! கடைசியில் நடந்தது இதுதான்!

கையில் போன் இருந்தால், கண்டவர் வாழ்விலும் புயல் வீச விட்டுவிடலாம் என்பதை அண்மைக்காலமாக வரும் செய்திகள் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. ‘சதுர வடிவில் ஒரு சனியன்’ என்றே வர்ணிக்கிற அளவுக்கு செல்போனின் அபாயம் பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது. நிமிஷத்துக்கு ஒருமுறை வந்து பேசுகிற சின்மயி, அண்மைக்கால அபாய சங்கு.

அது போகட்டும்… இதோ இன்னொரு புரளி. சோஷியல் மீடியாவை கவ்வி குதறிக் கொண்டிருக்கும் அந்த புரளி இதுதான். ‘விஜய்யின் மகன் சஞ்சய் அஜீத்தின் ரசிகன் தெரியுமா? அவரே தனது இன்ஸ்ட்கிராமில் இதை சொல்லியிருக்கிறார்’. சும்மாயிருப்பார்களா அஜீத் ரசிகர்கள்? அந்த இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை இன்டர்நேஷனல் ட்ரென்ட் ஆக்கிவிட்டார்கள்.

இது என்னய்யா பெரும் கூத்து? என்று கலங்கிப் போய் கன்பியூஸ் ஆன விஜய் ரசிகர்கள், அப்படியாண்ணா… சொல்லுங்க சொல்லுங்க என்று விஜய்யின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வந்து நச்சரித்துத் தொலைத்துவிட்டார்கள். கடைசியாக இந்த புலம்பல் விஜய்யின் காதுக்கே வர, அதை என்னன்னு பாருங்க என்று தன் அலுவலக வட்டாரத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கடைசியில் அறியப்பட்ட உண்மை என்ன தெரியுமா? யாரோ ஒரு மங்கூஸ் இந்த வேலையை சிறப்பாக பார்த்திருக்கிறார். விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் அவரே ஒரு இன்ஸ்ட்டாகிராம் அக்கவுன்ட்டை உருவாக்கி, அதில்தான் இப்படியொரு பொன் எழுத்தை பொறித்துவிட்டார்.

அலாரத்தை முழுங்கிட்டு அர்த்த ராத்திரியில சூரியனை தேடுற கோஷ்டி போலிருக்கு. நல்லாயிருங்கப்பா!

பின்குறிப்பு- விஜய்யின் மகனோ, அல்லது மகளோ எந்த சோஷியல் மீடியாவிலும் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆண் தேவதை – சினிமா விமர்சனம்

Close