புரட்டாசி முடியப் போவுது… விவேக் காமெடியால் கலகலப்பு!

யு ட்யூப் பக்கம் புரட்டாசி அலப்பறைகள் என்றே போட்டுத் தாக்குகிறார்கள். விதவிதமான மீம்ஸ். விதவிதமான விவாதங்கள் என்று நாட்டுக்கோழியே வெட்கப்படுகிற அளவுக்கு ஜீவகாருண்யம் பேசி வருகிறார்கள் நாக்கு செத்தவர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் இந்த புரட்டாசி மாதமும், அதன் பொருட்டு நடைபெறும் சைவ மிரட்டல்களும்தான்.

விவேக்கையும் விட்டு வைக்கவில்லை இந்த புரட்டாசி. எழுமின் என்றொரு படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகிறது. குழந்தைகள், அதுவும் பெண் குழந்தைகள் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிற படம் இது. முக்கிய ரோலில் நடிக்கிறார் விவேக்.

இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில்தான் புரட்டாசி பற்றியும் பேசி கலகலப்பூட்டினார் விவேக். வர்ற அக்டோபர் 18 ந் தேதி எழுமின் வெளியாகுது. அன்னைக்குதான் புரட்டாசி மாசமும் முடியுது. அதனால் எல்லாரும் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க என்று கூறினார். நான்-வெஜ் மட்டுமல்ல, தண்ணி தகரடப்பா போன்ற விஷயங்களுக்கும் புரட்டாசி கட்டுப்பாடு செல்லும் என்பது அடிஷனல் செய்தி.

கட்… படம் பற்றி நாலு வரி. கணேஷ் சந்திரசேகர் என்ற இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். திடீரென இந்தப்பாடலை தனுஷ் பாடினால் நல்லாயிருக்கும். ஏற்பாடு பண்ணுங்க சார் என்றாராம் விவேக்கிடம். தன் செல்வாக்கில் தனுஷை பாட வைத்துவிட்டார் விவேக். அப்புறம் இன்னொரு பாடலை உருவாக்கி, அதில் யோகி பி பாடினா நல்லாயிருக்கும் என்றாராம் கணேஷ். அதுவும் விவேக் முயற்சியால் நடந்தது. அப்புறமும் சும்மாயில்லாமல் இன்னொரு பாடலைக் கொடுத்து, இதில் சிம்பு பாடணும். எப்படி? என்றாராம். சும்மாயில்லாத விவேக் அதையும் செய்து கொடுத்திருக்கிறார்.

இப்படி விவேக் முயற்சியில் ஜொலிக்க ஜொலிக்க உருவாகியிருக்கும் எழுமின் படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க வசதியாக டிக்கெட்டுக்கு 15 ரூபாய் டிஸ்கவுன்ட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான வி.பி.விஜி.

பள்ளிக்குழந்தைகளே, பையை வீசிட்டு தியேட்டருக்கு நடையை கட்டுங்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் அஜீத் ரசிகன்! வில்லங்கத்தில் சிக்கிய விஜய் மகன்! கடைசியில் நடந்தது இதுதான்!

Close