காயத்துக்கு பத்து லட்சம்! கட்டு போட இருபது லட்சம்! காமெடி பண்றாரு விக்ரம்?

மழை தூறும் போதெல்லாம் பேஸ்புக்கை மூடிவிட்டு தெறித்து ஓடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஏன்? உடனே கவிதை எழுத கிளம்பிவிடுகிறார்கள் பலர். மழை வெள்ளத்தை விட கொடுமையாக இருக்கிறது அம்மழை குறித்த கவிதைகள் என்பதால்தான் இந்த ஓட்டம்! ஓ மழையே…உனக்கு அறிவிருக்கா? என்று துவங்கி அந்த மழையை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கவும் செய்கிறார்கள் இந்த கவிஞர்கள். இப்படி தெருவெங்கும் புழங்கும் திடீர் கவிஞர்களால் எப்படி பேஸ்புக் அதிர்ச்சியானதோ, அதைவிட பேரதிர்ச்சி இந்த மழை குறித்து ஆளாளுக்கு ஆல்பம், பாடல், வீடியோ, வாட்ஸ் அப் அழுகை என்று மெனக்கெட்டு தறிகெட்டு திரிவதுதான்.

லேட்டஸ்ட் அதிர்ச்சி நம்ம நடிகர் விக்ரம் தான். இவரே இயக்கி ஒரு வீடியோ மியூசிக் ஆல்பம் வரப்போகிறது. பாடல், இசை, யாரென்று தெரியவில்லை. ஒருவேளை அதையும் அவரே செய்திருக்கக்கூடும். இந்த ஆல்பத்தில் தமிழ், தெலுங்கு, பாலிவுட் நடிகர்களை வரவழைத்து ஆக்ட் கொடுக்க வைக்கப் போகிறாராம் விக்ரம். முக்கியமாக பாகுபலி ஹீரோ பிரபாஸ் இதில் நடிக்கப் போகிறாராம். இதை படம் பிடிக்க முறைப்படி போலீஸ் அனுமதியும் பெற்றிருக்கிறார்.

பல லட்சம் செலவு செய்து இந்த பாடலை அவர் உருவாக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. இந்த வெள்ள நேரத்தின் போது தனது பங்காக பத்து லட்சம் நிவாரண நிதியாக அளித்த விக்ரம், இந்த பாடலுக்கு அதைவிட பல மடங்கு செலவு செய்யப் போகிறார் என்பதை நினைத்தால், இப்படிதான் தோன்றுகிறது. காயத்துக்கு பத்து லட்சம்! கட்டு போட இருபது லட்சம்!

இருந்தாலும் பார்த்திபன் அட்ராசிடி ஓயாத நிலையில் விக்ரமின் அட்ராசிடியை காண ஆர்வமாகதான் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

1 Comment
  1. பாண்டிராஜ் says

    இதனால் யாருக்கும் ஒரு பயனும் கிடையாது. சென்னையில் மழை வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்ட போது இவர்கள் எங்கே போனார்கள் ???
    இதெல்லாம் சும்மா மக்களை திசை திருப்பும் பம்மாத்து வேலை

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இது கழட்டிவிடும் காலம்! சிக்கலில் பீப் பாய்ஸ்?

ஒரு ஹிட் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவ்வளவு கெட்ட காலத்திலும், அவர் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகளில்...

Close