பாரதிராஜா- பாலா மோதல்! எல்லாம் இந்த விக்ரம் பிரபுவால் வந்தது?

குற்றப்பரம்பரை படத்தின் குத்துவெட்டு குளறுபடிகள் ஒரு புறம் போய் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போவதில்லை என்று இரு தரப்பும் மோதிக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவுக்குதான் திரையுலக சப்போர்ட் ஜாஸ்தி என்கிறது லேட்டஸ்ட் தகவல்கள். அது போகட்டும்… இந்த விஷயத்தில் பாரதிராஜா இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொள்வது ஏன்? விசாரித்தால், ஆணிவேரில் நிறையவே சாதியக் காரணம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

முதலில் ‘குற்றப்பரம்பரை’ படத்தில் நடிக்க விக்ரம் பிரபுவைதான் அழைத்தாராம் பாலா. அவரும் பாலாவை சந்தித்து பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை முடிவில், நம்ம சிக்குன இடம் இரண்டு வருஷத்தை கூசாம தின்னுடும் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரம் பிரபு, நைசாக கழன்று கொண்டார். இருவரும் சந்திக்கிறார்கள். குற்றப்பரம்பரை உருவாகப் போகிறது என்ற தகவல் மட்டும் அப்பவே பாரதிராஜா காதுக்கு போனதாம். “நம்ம சாதிக் கதை இது. நம்ம சாதிக்கார பயலே ஹீரோவா நடிக்கிறான்னா நடிக்கட்டுமே” என்றாராம் அவர்.

அதற்கப்புறம் விஷாலும், ஆர்யாவும் உள்ளே வந்ததும்தான் ரொம்பவே கொதித்தாராம் இயக்குனர் இமயம். “ஒரு தெலுங்குக் காரனையும், ஒரு மலையாளத்தானையும் வச்சு நம்ம கதையை எடுக்கறதா? விட்றாத…” என்று கிளம்பியதாக காதை கடிக்கிறது கோடம்பாக்கம். அதற்கப்புறம்தான் அவர், நானும் குற்றப்பரம்பரை எடுப்பேன் என்று கிளம்பினாராம். ஒருவேளை இது நிஜமாக இருக்கும் பட்சத்தில், பாரதிராஜாவின் அற்புதமான படைப்புகளுக்கு உயிர் கொடுத்த கலைஞர்களில் பலர் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்தான். பாரதிராஜா அறிமுக நாயகிகளில் ஒருவர் கூட தமிழச்சி இல்லை. இதெல்லாம் இமயத்திற்கு தெரிந்திருந்தும் சாதிய சாயத்தை எடுத்து பூசிக் கொண்டு பேயாட்டம் ஆடுவதுதான் ஏனென்றே புரியவில்லை!

இந்த நூற்றாண்டிலும் சினிமா, அரசியல், இலக்கியம், பத்திரிகை தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் தலைவிரித்தாடும் சாதியை எந்த பெரியார் வந்து கொளுத்துவது? கஷ்டம்தான்…

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    // “நம்ம சாதிக் கதை இது. நம்ம சாதிக்கார பயலே ஹீரோவா நடிக்கிறான்னா நடிக்கட்டுமே” என்றாராம் அவர்.//

    படம் வெளியாகும்போது உங்க சாதிக்கு மட்டும் போட்டு காட்டிக்குங்க.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Sheena Chohan – Stills Gallery

Close