படப்பிடிப்பில் விபத்து! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷால்!

திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா… என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே போய்விடுகிறது அவரது ஆக்ஷன் ப்ளஸ் அவதாரங்கள். நடுநடுவே நடித்துக் கொண்டும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு செங்கல் தயாரித்துக் கொண்டும் இருப்பது அவரது தனித்திறமைதான்.

ஊர் கண்ணே படுகிற அளவுக்கு இப்படி ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிற அவருக்கு, நேற்றைய பொழுது ரொம்ப சிக்கலானது. கவலையானது. கத்திச்சண்டை படப்பிடிப்பில் இருந்தார் அவர். படுபயங்கரமான ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வில்லன் கும்பல் தாக்கும்போது குறி தவறி அவரது தோள் பட்டையில் இறங்கிவிட்டதாம் அடி. இதனால் அவரது தோள் பட்டை மூட்டு பலமாக நழுவ, வலியில் கத்திவிட்டாராம் விஷால்.

அவசரம் அவசரமாக அவரை அள்ளிக் கொண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஓடியது படக்குழு. உடனடியாக அங்கு அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனா இருக்கிற விஷால், அவ்வப்போது பொறுப்பான தமிழனாகவும் இருந்தால்தானே சோம்பேறித்தனம் வரும்? எங்கப்பா கேக்குறாரு மனுஷன்?

1 Comment
  1. Bala says

    தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே

    You know which is bad thinking?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Muthina Kathirika Shooting Spot Stills

Close