டைரக்டர் நடிகை லவ்? குறுக்கே கட்டைய போடும் விஷால்!

“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்… அடியேனுக்கென்ன?’’ என்று போவது நட்புக்கு அழகா? நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா? அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும் என்று விஷால் பற்றி குஷாலாகிறது கோடம்பாக்கம். ஆனால், “ஹீரோ இப்படி பிடிவாதம் பிடிச்சா, நாங்கள்லாம் எப்போ நல்ல மாதிரி சிரிக்கறது?” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் குட்டிப்புலி முத்தையா. இவரது முதல் படத்தில் லட்சுமிமேனன்தான் ஹீரோயின்.

அதற்கப்புறம் இவர் இயக்கிய ‘கொம்பன்’ படத்திலும் லட்சுமிமேனனையே நடிக்க வைத்தார் முத்தையா. ஒரு குயர் நோட்டுக்கு இப்படி ரெண்டு குயர் சைசுக்கு அட்டை போட்ட பின்பும் அடங்கவில்லை அவரது ஆசை. தொடர்ந்து மூன்றாவது படத்திலும் லட்சுமிமேனனை ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தாராம். ஆனால் அந்த மூன்றாவது படமான ‘மருது’ படத்தின் ஹீரோ விஷாலாச்சே? லட்சுமிமேனன் வேண்டாம் என்று அவர் பிடிவாதம் பிடிக்க, “எனக்காக ப்ளீஸ்…” என்று முத்தையா கெஞ்ச, சூழ்நிலை சூடாகவே இருந்தது பல நாட்களுக்கு. கடைசியில் விஷாலுக்குதான் வெற்றி. லட்சுமிமேனன் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.

படப்பிடிப்பில் சகஜமாக இருந்தாலும், லட்சுமிமேனன் இல்லாத ஷுட்டிங் ஸ்பாட், முத்தையாவை என்னவோ பண்ணியிருக்க வேண்டும். நடுவில் விக்ரம் பிரபுவுக்கு கதை சொல்லி ஓ.கே பண்ணியவர், “இந்த படத்தில் உங்களுக்கு ஜோடியா லட்சுமிமேனன்தான் நடிப்பார். நீங்க முடியாதுன்னு சொல்லவே கூடாது” என்று கூறிவிட்டாராம் கட் அண்டு ரைட்டாக. ஆக நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. முத்தையாவின் நான்காவது படத்துக்கும் கதாநாயகி லட்சுமிமேனனேதான்!

இப்ப என்னா பண்ணுவீங்க? விஷால்… இப்ப என்னா பண்ணுவீங்க?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Aakko-Enakenna Yaarum illaye – Anirudh ravichandran

Close