களத்தில் இறங்கிய விஷால், கார்த்தி! மீட்பு நடவடிக்கையில் தீவிரம்!
கவுன்சிலரை கேட்க துப்பிருக்கா? கட்சிக்காரன கேட்க துப்பிருக்கா? நடிகன் எவ்வளவு கொடுத்தான்னு கேட்கிறீயே… கோடி கோடியா கொள்ளை அடிச்சவனையெல்லாம் விட்டுட்டு இவங்களை மட்டும் கேட்கிறவன் முட்டாள், காட்டுமிராண்டி என்றெல்லாம் பொன்னெழுத்துக்களால் பொரியல் செய்து வருகிறார்கள் சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் ரசிகர்கள். எவ்வித முதலீடும் இல்லாமல் தினந்தோறும் லட்சங்களில், கோடிகளில் சம்பாதிக்கிற ஒரே இனம் அதுதான் என்பதாலும், நாளைய தமிழகம் நான்தான் என்பது போல சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசி வருவதாலும் மட்டும்தான் இந்த கேள்வி. (போத்தீஸ் விளம்பத்திற்காக கமல் கொடுத்த கால்ஷீட் நேரம் 24 மணி நேரம்தான். சம்பளம் எவ்வளவு தெரியுமா? பதினைந்து கோடி)
இந்த கேள்வி எல்லா நடிகர்களுக்கும் பொறுந்தாது. ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆகிய நால்வரை நோக்கிதான் இந்த கேள்வி. (அஜீத் 60 லட்சம் கொடுத்தார் என்பதெல்லாம் சரியான டுபாக்கூர் தகவல். புரளி மட்டுமே. போகட்டும்… ஒரு நல்ல விஷயத்தை பற்றி பேச வரும்போது எதற்கு மடை மாற வேண்டும்?
நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன்பிருந்தே ஏழைகளுக்கு உதவி செய்யணும் என்று அடிக்கடி பேசி வந்த விஷால், பொறுப்புக்கும் வந்துவிட்டாரல்லவா? தன் பொறுப்புணர்ந்து அவர் செயல்பட்ட நேரம் இது. மருது படப்பிடிப்பிலிருந்த விஷால் அதை கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். தோழா படப்பிடிப்பிலிருந்த கார்த்தி, கருணாஸ் ஆகியோரும் கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
ரெஸ்க்யூ சென்னை குரூப் என்றொரு வாட்ஸ் ஆப் குரூப்பை துவங்கி, அதில் பரபரப்பாக செயல்படும் நடிகர் நடிகைகளை இணைத்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொட்டலம், பால், மற்றும் தண்ணீர் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் படகில் சென்று வழங்கி வருகிறார்கள். பலரை படகின் மூலம் மீட்டும் வருகிறார்கள்.
வெளியே நின்று வீரம் பேசுவதை விட, களத்தில் இறங்கி செயலாற்றும் விஷால் தலைமையிலான நடிகர் நடிகைகளுக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம்!
selfie pulla selfie pulla…. nalla kodukkingappa posu…