ரசிகரின் கன்னத்தில் விஷால் கொடுத்த ‘பளார்…’ பிரச்சனை இப்போ காவல் நிலையத்தில்!

‘ரசிகர்களுக்கும் ஹீரோக்களுக்குமான உறவு எப்படியிருக்க வேண்டுமோ தெரியாது. ஆனால் விஷாலுக்கும் அவரது ரசிகர்களுக்குமான உறவு போல இருக்கவே கூடாது!’ அவரிடம் அறை வாங்கி, ‘அறை’குறை அதிர்ச்சியிலிருக்கும் காரைக்குடி ரசிகர்களின் கண்ணீர் தகவல் இது!

தன்னால் விரும்பப்படும் ஹீரோவை அளவு கடந்து நேசிப்பது ரசிகர்களின் முழு நேர பணியாக கூட இருக்கிறது இங்கே. அதிலும் சில ரசிகர்கள் ஹீரோக்களின் வீட்டு வாசலில் ‘இருமுடி’ ஏந்தி நிற்காத குறைதான். அந்தளவுக்கு தன் ஹீரோவை நேசிக்கும் அவர்களுக்கு ஹீரோக்கள் தருவது என்ன? விஷால் மாதிரி நடிகர்கள் தருவது சுட சுட ஒரு அறை.

கடந்த சில வாரங்களாக காரைக்குடியில் ‘ஆம்பள’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஷால். தான் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கு புறப்படும் அவர் சைக்கிளை வேகமாக பெடல் செய்தபடியே அந்த ஊரை சுற்றி வருகிறாராம். உடற் பயிற்சிக்காகவும், காலைக் காற்றை சுதந்திரமாக அனுபவிக்கும் விதத்திலும்தான் இந்த ‘சைக்கிளிங்’. இந்த நல்ல நேரத்தில் அவரை பின் தொடர்ந்தாராம் விஷாலின் தீவிர ரசிகர் ஒருவர். விஷால் எவ்வளவு வேகமாக சைக்கிளில் போகிறாரோ, அதே வேகத்தில் அவரை பின் தொடர்வது இவரது வாடிக்கை. ஒரு நாள் சைக்கிளை நிறுத்தி என்ன வேணும் உனக்கு? என்று ஆத்திரப்பட்ட விஷால், அவரை அருகில் அழைத்து உன் செல்போனை கொடு என்று கேட்டிருக்கிறார்.

அதை வாங்கிய விஷால், அப்படியே கீழே போட்டு உடைக்க, அதிர்ச்சியானாராம் ரசிகர். இவரது சைக்கிளிங்கை தன் செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததுதான் அவர் செய்த ஒரே குற்றம். அதற்கப்புறம் சும்மாயிருக்க அவர் என்ன சாதாரண ரசிகரா? சண்டக்கோழி ரசிகராச்சே? விட்டேனா பார்… என்று தன் நண்பர்களை திரட்டிக் கொண்டு போய் காவல் துறையில் புகாரும் கொடுத்துவிட்டார் விஷால் மீது.

சரி போலீஸ் நடவடிக்கை என்ன? விஷால் பெரிசா… ரசிகர் பெரிசா… (ம்ம்ம்… அதேதான் ரிசல்ட்!)

Read previous post:
சீனு ராமசாமியா, யார் அது? கடும்கோபத்தில் இசைஞானி இளையராஜா

சீனு ராமசாமி இயக்கி வரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’! விஜய் சேதுபதியும், விஷ்ணுவும் இணைந்து நடிக்க இவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் அட்டக்கத்தி நந்திதா. நந்திதாவுக்கு முன்...

Close