திருட்டு விசிடி எடுப்பதே தியேட்டர்களில்தான்! விஷால் பேச்சுக்கு திருப்பூர் சுப்ரமணியம் ஆத்திரம்! (ஆடியோ இணைப்புடன்)
மருது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், தமிழ்சினிமாவை அழித்து வரும் திருட்டு விசிடி பற்றி சில விஷயங்களை காட்டமாக பேசினார்.
“24 படத்தின் திருட்டு விசிடி வந்திருச்சு. அதை எந்த தியேட்டர்ல எடுத்தாங்க. யார் எடுத்தாங்க என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் யாரிடம் முறையிட்டாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. நான் பேசி பேசி டயர்டாகிட்டேன். இனி விடப்போவதில்லை. விரைவில் வெளியாகவிருக்கும் மருது திரைப்படத்தையும் எடுக்க முடிவு பண்ணி அதுக்கான வேலையில் இறங்கிட்டாங்க. இந்த முறை எந்த தியேட்டர்ல எடுத்தாலும் அதை கண்டுபிடிப்பேன். தயாரிப்பாளர் சங்கத்துகிட்ட முறையிடுவேன். அவங்க ஆக்ஷன் எடுத்தால் ஓ.கே. இல்லேன்னா நான் சில முடிவுகளை எடுப்பேன். அதுக்காக என்ன வந்தாலும் நான் அஞ்சப்போவதில்லை” என்றார்.
அவர் கோபமாக பேசி 12 மணி நேரம் ஆவதற்குள் தன் ஆத்திரத்தை விஷாலை விடவும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்திவிட்டார் கோவை திருப்பூர் பகுதியின் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கங்களின் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன். அவருடைய கோபமான பேச்சு, “உங்களால ஆனதை பாருங்க” என்பது போல இருப்பதுதான் வேடிக்கை. அதிலும் கிராமங்களில் தினந்தோறும் 2000 மட்டுமே வசூலாகும் தியேட்டர்காரர்கள் பிழைப்புக்கு வேற என்ன பண்ணுவாங்களாம்? என்று அவர் கேட்பது வேதனையின் உச்சம்.
அவர் பேசிய விஷயம் அப்படியே ஆடியோவாக இங்கே-
சாட்டையடி பதில், இதுக்கு எந்த ஹீரோவது, தயரிபாரலவது பதில் சொல்வார்களா?
Well directed questions..