அஜீத் படம்? தயாரிப்பாளர் அவரா? இவரா?
அவர் பாட்டுக்கு சிவனே என்றுதான் இருக்கிறார். ஆனால் செய்திகள்தான் றெக்கை கட்டி பறக்குது! “நீங்க கதை பண்ணுங்க. தயாரிப்பாளர் நான் சொல்றேன்” என்று வேதாளம் சிவாவிடம் சொல்லிவிட்டு தினம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜீத். அதெப்படி? அவர் வீட்டிலேயே ஒரு பிரமாதமான தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. யுஎஃப்ஓ, விஎப்எக்ஸ் மூலம் அவ்வப்போது ரிலீஸ் ஆகும் புதுப்படங்களை அதே சூடு குறையாமல் பார்த்துவிடுகிறார் அஜீத். சில தினங்களுக்கு முன் ரிலீசான ‘ரஜினி முருகன்’ வரைக்கும் பார்த்து அவர் டிக் அடித்துவிட்டாராம். (தாரை தப்பட்டைங்க?)
இந்த நிலையில்தான் அவர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ‘சைன்’ பண்ணிவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அஜீத்தை தொடர்ந்து வற்புறுத்தி வருகிற நிறுவனம் ஏ.ஜி.எஸ்சும்தானாம். ஏ.எம்.ரத்னத்தின் நிறுவனத்திற்கு இப்போதைக்கு படம் தருவதாக இல்லை என்று அவர் முடிவெடுத்த பின்னால் இவ்விரண்டில் ஒரு நிறுவனம்தான் அஜீத்தின் அடுத்த படத்தை தயாரிக்கும்! என்றாலும், இன்றைய நிலவரப்படி ஏஜிஎஸ் நிறுவனத்திற்குதான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
தாராள ஏராள போக்கில் சத்யஜோதியை விட, சர்வ சுதந்திரமான நிறுவனம் ஏ.ஜி.எஸ் என்பதால், ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் இவர்கள் மீதுதான் ஈர்ப்பு ஜாஸ்தி என்கிறது மேலதிக தகவல்கள். எது எப்படியிருந்தாலும், மே மாதம் ஷுட்டிங் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அஜீத்.
ivana vanchu produce panna AM Ratnam ready ah illai da moothigala