தமன்னா சினிமாவின் மச்சமா? மிச்சமா?

என்னதான் உள்ளூர்ல பூ விற்றாலும், டவுன்ல போய் முழம் போடணும் என்கிற ஆசை இல்லாத நடிகைகளே இருக்க முடியாது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தெரிந்த நடிகை ஆகிவிட்டால் போதும், அப்படியே பிளைட் பிடிச்சு மும்பை போய்விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் பலர். இந்தியில் ஒரு படத்திலாவது நடித்து ஹிட் பண்ண வேண்டும் என்கிற ஆசை அவர்களை விரட்டிக் கொண்டேயிருக்கிறது. ஸ்ரேயா, த்ரிஷா, நயன்தாரா எல்லாரும் அங்கு போய் எடுபடாமல், போன வேகத்திலேயே திரும்பி வந்ததை நாடே அறிந்து வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த மும்பை மோகம் விட்டபாடில்லை.

தமிழ் தெலுங்கில் வாண்ட்டட் இருந்தாலும், ‘இருங்க… கொஞ்ச நேரம் நம்ம திறமையை அங்கே காட்டிட்டு வர்றேன்’ என்று கிளம்பினார் தமன்னா. அவரது முதல் படமான ஹிம்மத்வாலா பட ரீமேக் செம பிளாப். மயிலு ஸ்ரீ தேவி நடித்த கேரக்டரில்தான் இவரும் நடித்திருந்தார். மயிலு மயிலுதான். மற்றதெல்லாம் உச்சி மண்டை வெயிலு என்று தமன்னாவை ஒதுக்கிவிட்டார்கள் ரசிகர்கள். அதற்கப்புறமும் விடாமல் அவர் நடித்த இன்னொரு படமான ஹம்சகல்ஸ்சும் பிளாப். இதில் பிபாசாபாசு இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தாராம். ஸ்பாட்டில் தமன்னாவுக்கு கொடுத்த முக்கியத்தை பார்த்து வெறுத்துப் போயிருந்தவர், இந்த நல்ல செய்தி கேட்டுதான் நிம்மதியானாராம்.

இப்போது மூன்றாவது முறை. இட்ஸ் என்ட்டர்டெயின்மென்ட் என்ற படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கும்பிடாத தெய்வமில்லை, கொளுத்தாத சூடமில்ல என்கிற அளவுக்கு இந்த படத்திற்காக பிரார்த்திக் கொண்டிருக்கிறாராம் தமன்னா. எதுக்கு உங்களுக்கு அந்த ஆசையெல்லாம். பேசாம கிளம்பி டோலிவுட் வாங்க. நான் இருக்கேன் என்று தமன்னாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் தெலுங்கின் சூப்பர் ஹிட் இயக்குனர் பூரி ஜெகன்நாத்.

தமன்னாவை மச்சம்ங்குது தமிழும், தெலுங்கும்! மிச்சம்ங்குது இந்தி. வேண்டாம்ன்னு வெறுத்தால்தான் அதுமேல ஆசையே வருது. தமன்னாவும் மனுஷிதானே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு...

Close