த்ரிஷா வருண்மணியன் பிரிவுக்கு காரணம், அந்த ஒரு வார்த்தைதானாம்!

தாலி கட்டி அட்சதை விழுகிற வரைக்கும் கூட நடிகர் நடிகைகள் திருமணங்களில் திடீர் மாற்றம் வரலாம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் நம்ம த்ரிஷா வருண்மணியன் விவகாரம்தான்! ‘நாங்க பிரிஞ்சுட்டோம்’ என்று த்ரிஷாவே அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகும், விடுகிறதா மீடியா? ஊர் முழுக்க அதே பேச்சுதான். ‘சேர்ந்தீங்க, வாழ்த்துனோம். பிரிஞ்சிங்க, கவலைப்படுறோம். அதுக்கான காரணத்தை சொல்லுங்க’ என்று த்ரிஷாவை நச்சரிக்க, இரு தரப்பும் தெரிவிப்பது ஒரு கனத்தை மவுனத்தைதான்.

இருந்தாலும் ‘விடாது பொறுப்பு’ என்று தேடி தேடி புலனாய்ந்தால், திடுக்கிடும் மேட்டரெல்லாம் வெளியே வருகிறது. அவர்கள் பிரிவுக்கு காரணம் அந்த ஒரு வார்த்தைதானாம். அது என்ன வார்த்தை? நிச்சயதார்த்தம் முடிந்ததும் வருண் மணியன் ஒரு பார்ட்டி கொடுத்தாரல்லவா? அந்த பார்ட்டி த்ரிஷா, வருண் குடும்பத்திற்கு மட்டும்தான் என்று சொல்லப்பட்டதாம். வேறு சினிமாக்காரர்கள் யாருக்கும் அங்கு அனுமதி இல்லை என்று முடிவெடுத்திருந்தாராம் வருண். ஆனால் நடந்ததே வேறு.

அந்த பார்ட்டிக்கு திடீரென தனுஷும் வந்து சேர்ந்தார். பிற்பாடு விசாரித்தால், அவருக்கு அழைப்பு விடுத்தவரே த்ரிஷாதான் என்பது தெரிய வந்ததாம். மறுநாள் இந்த தேவையில்லாத வரவு குறித்து குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்திருக்கிறது. அப்போது வருண் வீட்டு பெரியவர் ஒருவர் ஏதோ கருத்து சொல்லப் போக, சட்டென்று குறுக்கிட்ட த்ரிஷா, ‘ஷட் அப்’ என்றாராம் அந்த பெரியவரிடம். அவ்வளவுதான்…. கல்யாணமே பொக்கை பல் சமாச்சாரம் ஆகிவிட்டது.

‘நல்லவேளை காப்பாத்துனடா சாமீ’ என்று இருவருமே சந்தோஷப்படுகிறார்களாம் இப்போது. ஆக மொத்தம் சந்தோஷமா இருந்தா சரி!

Read previous post:
இளம் நடிகை ஷாக் -மனிஷா கொய்ராலா அவ்வளவு ஆறுதலாக நடந்து கொண்டாரா?

உவமைகள் எல்லாம் உண்மைகளானால் உலகம் தாங்குமாடா கலகநாதா? புனல் மின்சாரம், அனல் மின்சாரமெல்லாம் அவசியமேயில்லை. ‘மீனா கண்ணே... கண்ணே மீனா!’ என்று கவிதையிலே மின்சாரம் எடுத்து, எழுத்திலேயே...

Close