மதன்கார்க்கி வரியால் பொறி கலங்கிய விஜய் ரசிகர்கள்! தேவையா… இது தேவையா…?
போஸ்டர்ல சாணியடிப்போர் சங்கம், பில்லி சூனிய மந்திரவாதிகள் சங்கம், மொத்த விலையில் முடிகயிறு விற்போர் சங்கம், அலறும் குழந்தைகளை அடக்க முடியாதோர் சங்கம்… இப்படி எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ஒரே படம் வின் ஸ்டார் விஜி நடித்த ‘எப்போதும் ராஜா’!
‘கொதிக்கிற அயர்ன் பாக்சுல குடிச்சுட்டு குப்புற விழுந்த மாதிரி ஆளே ஒரு தினுசா இருக்காரு… இவருதான் வின் ஸ்டாரா?’ என்று அவரது புகைப்படத்தை பார்க்கிற அத்தனை பேரும் தமிழ்சினிமா மீது வெறி கொண்டு திரிகிற நேரத்தில், தன் பேனாவை வைத்துக் கொண்டு சும்மாயில்லாமல் மதன் கார்க்கி என்னத்தையோ எழுதப்போக, நாடே கொந்தளிக்கிற அளவுக்கு அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் அந்த வின் ஸ்டார் விஜி.
வேறொன்றுமில்லை, கத்தி படத்தில் ஒரு பாடல் வரி வருகிறதாம். அதில் ‘வின் ஸ்டார் கிராமத்திற்கு சென்று குடியிருக்கலாம்’ என்று ஒரு வரியை எழுதியிருக்கிறார் மனுஷன். அவர் எந்த குரங்கை நினைத்துக் கொண்டு இந்த சூப்பை குடித்தாரோ? நம்ம ஹீரோவுக்கு நடு மண்டையில சுர்ருன்னு சந்தோஷம் வந்திருச்சு. உடனே பேனாவை எடுத்து கவி சிற்றரசு மதன் கார்க்கிக்கு நன்றி அறிக்கை வெளியிட்டு விட்டார். அதில், வின் ஸ்டார் என்று என்னை புகழ்ந்து எழுதிய மதன் கார்க்கிக்கும், இசையமைத்த அனிருத்துக்கும், நண்பர் விஜய்க்கும் (அட்ரா சக்க… அட்ரா சக்க…) தன் நன்றியையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
அப்படியே இன்னொன்னும் சொல்லியிருக்காருங்க. நெஞ்சை புடிச்சிகிட்டு அதையும் கேட்ருங்க மக்கழே…. நாடெங்கிலும் உள்ள அவரது கோடானு கோடி ரசிகர்கள் கத்தி படத்தை முதல் நாளே முதல் ஷோவே பார்த்துடணுமாம். இல்லேன்னா வின் ஸ்டாரோட மனசு தாங்காதாம்!
இப்படி தமிழ்சினிமாவுக்கும் வின் ஸ்டார் விஜிக்கும் அழியாத புகழ் சேர்த்த அண்ணன் கலிங்கத்து பரணி கவிஞருக்கு காக்கா முட்டை தாய் கழகத்தின் சார்பில் கோடானு கோடி நன்றி தெரிவிக்கிறார்கள் வின் ஸ்டார் ரசிகர்களும்! குறிப்பிட்ட பாடல் வரி வரும் காட்சியில் வின் ஸ்டார் விஜியின் பட க்ளிப்ங்ஸ் ஒன்றையும் வெளியிட்டு கத்திக்கு அழியாத புகழ் சேர்க்கும்படியும் ஏ.ஆர்.முருகதாசிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கிய குறிப்பு- வின் ஸ்டார் என்பது உலக புகழ்பெற்ற ஒரு கேஸினோ. அங்குதான் குடியிருக்க வேண்டும் என்று எழுதியிருப்பார் மதன்கார்க்கி. ஆனால் நம்ம வின் ஸ்டாருக்கு அதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு ‘அது’ பத்தாதே? இருந்தாலும் இந்த பரபரப்பான அறிக்கையை படிக்க ஜாலியாத்தான் இருக்கு.
அதைவிட முக்கிய குறிப்பு 2– அது வின் ஸ்டார் கிராமம் இல்லையாம். Instagram அட ங்கொப்புறானே…
https://www.youtube.com/watch?v=sS-7Vvqq9DM
Annae, athu Insta…. Insta gram