அஜீத் சாரை பார்த்தால் சொல்றீங்களா? காத்திருக்கும் இளம் நடிகை!
“முன்பெல்லாம் யார் கூட நடிக்கணும்னு ஆசை?” என்ற கேள்வியை கேட்டால் ரஜினியுடன் என்பார்கள் நடிகைகள். இப்போது அப்படியே உல்டா! அஜீத் சாருடன் நடிக்கணும் என்றோ, விஜய் சாருடன் நடிக்கணும் என்றோ இன்ஸ்ட்டன்டாக ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு படத்தில் அவருடன் நடித்தாலும், ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒருமுறை பார்த்ததோடு சரி. இன்னமும் அஜீத் அஜீத் என்று கனவிலும் நினைவிலும் ‘கரைந்து’ கொண்டிருக்கிறார் பார்வதி நாயர்.
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவருக்கு, எப்படியோ அஜீத் பைத்தியம் பிடித்துவிட்டது. அடிப்படையில் இவர் ஒரு ஓவியர் என்பதால் அப்படியே அவரை அச்சு அசலாக வரைந்துவிட்டாராம். அந்த ஓவியத்தை அஜீத்தை நேரில் சந்தித்து பரிசாக தர வேண்டும் என்பதுதான் பார்வதி நாயரின் தீராத ஆசையாக இருக்கிறது. ஆனால் அவரை சந்திப்பது அவ்வளவு ஈசியா என்ன?
முறைப்படி அப்பாயின்ட்மென்ட் வாங்க ஒரு புறம் ட்ரை பண்ணிக் கொண்டிருக்கும் அதே வேளையில், நான் இப்படி ஒரு ஓவியம் வரைச்சுருக்கேன்னு சார் காதுக்கு யாராவது கொண்டு போங்களேன் என்று இன்னொரு புறம் பார்க்கிற நிருபர்களிடமெல்லாம் தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.
ஓவியத்தை மடிச்சு உள்ளே வைம்மா… அவரு வெளிநாடு போறார். போயிட்டு வந்த பிறகுதான் வெளிவட்டார தொடர்பெல்லாம்!