யுவனா? ஹாரிஸ்சா? இழுபறியில் விசுவாசம்!

பேக் டூ பார்ம் ஆகிவிட்டார் யுவன். பேக் டூ ஹோம் ஆகிவிட்டார் ஹாரிஸ். ஏன்? பழசு புதுசாவதும், புதுசு பழசாவதும் இயற்கைதானேய்யா? அப்படிதான் சமீபகாலமாக ஹாரிஸ் பழசாகிவிட்டார். யாரு இல்லேன்னாலும் ஹாரிஸ் இருக்கணும் என்று அடம் பிடித்த அம்புட்டு பேரும், ‘அடப்போய்யா காரீசு…’ என்று விலகிப் போனதற்கு பின்னால் இருக்கிற உண்மை அவ்வளவு பெரிய நூடுல்ஸ் இல்லை. அதிகப்படியான சம்பளமும், அநியாயத்துக்கு தாமதமும்தான்.

இந்த நேரத்தில்தான் அஜீத்தின் விசுவாசம் படத்தில் யுவன் கமிட் ஆகியிருப்பதாக பேச்சு. அஜீத் ரசிகர்களே ஆஹா… ஆனந்தம் என்று கூத்தாடாத குறை. ஏன்? அவர்களுக்கும் ஒரு மாற்றம் தேவைப்படுகிறதல்லவா? எவ்வளவு நாளைக்குதான் ஹாரிஸ், அனிருத் என்று சகிக்க முடியும்? அதனால் யுவனை கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால் இந்த சந்தோஷத்தில் மீண்டும் கல் விழுந்திருக்கிறது.

கடந்த சில தினங்களாக டைரக்டர் சிவாவும், அஜீத்தும் ஹாரிஸ் வீட்டுக்கு அடிக்கடி செல்கிறார்களாம். யுவனை கமிட் பண்ணிட்டு ஏன் ஹாரிஸ் வீட்டுக்கு போகணும்? என்கிற கேள்வி எழுந்திருப்பதால், சந்தேகம் பலப்படுகிறது.

யாராவது நிஜத்தை சொல்லுங்களேன்…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சம்முவப்பாண்டி… சந்தோசம்யா!

ஒரு ஹீரோவை ‘லாஞ்ச்’ பண்ணுவதென்பதே ஒரு கலை. அதுவும் இன்றைய விளம்பர யுகத்தில் எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டும்? ஆனால் சினிமாவில் சிற்றரசனாக இருந்த விஜயகாந்துக்கும் அவரது...

Close