அஜீத் ரசிகர்களை குழப்பிய வாட்ஸ் அப்! சிம்புவின் வேலையாக இருக்குமோ என குழப்பம்?

கடந்த இரண்டு நாட்களாகவே மாவட்ட தலைநகரங்களில் இயங்கி வரும் (சைலன்ட்டாக) அஜீத் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வருகிறது. அதையும் அவர்கள் கண்ணும் கருத்துமாக ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வேகம் நீடித்தால், வாலு படம் திரைக்கு வரும்போது அநேகமாக அஜீத் ரசிகர்கள் அத்தனை பேர் பார்வைக்கும் அது சென்று சேர்த்திருக்கும். அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் என்ன?

தல ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்….

நடிகர் சிம்பு தல யின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மன்மதன் படத்தில் ஒரு காட்சியில் “அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க” என்று கோஷமிடுவார்…. அன்றிலிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு தல ரசிகர் என்பதை வெளிகாட்டியே வருகிறார்… இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட சிம்புவின் பேச்சை கவனித்தவர்களுக்கு தெரியும். சமீபத்தில் சிம்புவின் புதிய படமான கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களிலே அது twitter ல் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் 5வது இடத்தையும் பிடித்து ட்ரெண்ட் ஆனது. இதற்கு முழுமுதற் காரணம் தல ரசிகர்களே என ஊடகங்கள் சிலாகித்தன…

இன்று சிம்பு விற்கு இக்கட்டான சூழ்நிலை… 3 வருடங்களுக்கு பிறகு சிம்பு நடித்த வாலு திரைப்படம் ஜூலை 17 அன்று வெளியாகிறது. அதே நாளில் தனுஷ் நடித்த படமும், சிவகார்த்திகேயன் நடித்த படமும் வெளியாகிறது. oneindia இணையதளத்தில் தனுஷ்-சிவகார்திகேயன்-சிம்பு என்ற வரிசை நிலையே தற்போது நிலவுவதாகவும், இந்த இருவரின் படங்களுடன் சிம்புவின் படமும் தாக்குப்பிடிக்குமா எனவும், தற்போது மார்கெட் இல்லாத சிம்புவின் எதிர்காலம் இப்படத்தின் வெற்றியில்தான் இருக்கிறது எனவும், மீண்டும் சிம்பு-தனுஷ் என்று வரிசை மாறுமா? எனவும் செய்திகளை வெளியிட்டு உள்ளது. ஒவ்வொரு தல ரசிகனும் வாலு படத்திற்கு ஆதரவு தர வேண்டும்…

முன்பு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தல யின் அசல் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் வெளிப்படையான ஆதரவு அளித்து, கிட்டத்தட்ட படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் கட்அவுட் வைத்தனர் என்பதை நினைவில் வைக்கவும். அசல் வெளியான சமயம் Facebook,Whatsapp,Twitter இல்லாத காலகட்டம். அதனால்தான் தல யின் வெறித்தனமான ரசிகரான சிம்பு வின் வாலு படத்திற்கு அனைத்து தல ரசிகர்களும் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும்…

“தல யை நம்பினோர் கைவிடப்படார்” என்ற புதிய வரலாற்றை படைக்க சபதம் எடு தல ரசிகனே…. தல-தளபதிக்கு பிறகு தமிழ் சினிமாவின் மாஸ் ஓப்பனிங் தல யின் வெறியர் சிம்பு வாகத்தான் இருக்க வேண்டும் என்று சபதம் எடு தல ரசிகனே…. தல ரசிகர்களே…. நம் வலிமையை, நம் நன்றியுணர்வை நிரூபிக்க வேண்டிய தருணம் இது…. Facebook,Whatsapp,Twitter என அனைத்து சமூக வலைத்தளங்களில் இதனை பகிருங்கள்…. ஒவ்வொரு தல ரசிகனும் சிம்புவை ரசிப்பான்….. ஒவ்வொரு சிம்பு ரசிகனும் தல-யை வணங்குவான்….

இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் நிஜமாகவே அஜீத் ரசிகர் உருவாக்கியதுதானா? என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. ஓவரா நெஞ்ச நக்கும்போதே, இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுதே?

3 Comments
 1. oo says

  சமீபத்தில் மீடியாவில் வேலை செய்யும் என் நண்பரை சந்தித்தேன். அவர் கூறிய திரை மறைவு உண்மை வியப்பாக இருந்தது.
  .
  மாத மாதம் அஜித் ஆபீஸ்லிருந்து ஒரு கவரில் பணமும் , அவரின் பெருமை சேர்க்கும் புகைப்படங்களும் பல தர பட்ட மீடியாக்களுக்கும் அனுபப்படுமாம். சில பொய்யான விளம்பரங்களும் அனுபப்படுமாம். அதை அந்த மீடியாக்களும் பத்திரிக்கைகளும்
  ” யாருக்கும் தெரியாமல் அஜித் செய்யும் உதவிகள் ”
  போன்ற தலைப்புகளில் வெளியிடுவார்கலாம்.
  .
  யாருக்குமே தெரியாமல் அஜித் செய்யும் உதவிகளை அவர் வீட்டுக்குள் சென்று யார் தான் படம் பிடிக்கிறார்கள் என்று நான் கூட யோசித்தது உண்டு.
  .
  இதற்கு மட்டுமே ஒரு வருடத்துக்கு பல லட்சங்கள் மீடியாவுக்கு செலவு செய்கிறாராம் அஜித்.
  .
  பெரிதாக எந்த நடிகன் மீதும் ஈடுபாடு இல்லை.
  ரசிகர்களை ஏமாற்றுபவனே நல்ல நடிகன் என்பது என் கருத்து.
  .
  ஆனால் இதை கேள்வி பட்டதிலிருந்து மற்ற நடிகர்களை விட இப்படி கீழ் தனமான விளம்பரம் தேடும் அஜித் மீதும் , பணத்திற்காக அதற்கு உடந்தையாக இருக்கும் பெரும்பாலான மீடியாக்கள் மீதும் எனக்கு வெறுப்பை தாண்டி ஒரு வகையான அருவருப்பே உண்டானது.
  .
  —————————— சிவநேசன் , முகநூல் , திருச்செந்தூர்

  1. admin says

   நீங்கள் கேள்விப்பட்டது முற்றிலும் தவறான தகவல் சிவநேசன். அப்படி பெயர் வாங்கி முதல்வர் சீட்டை பிடிக்கும் ஆசை அஜீத்திற்கும் இல்லை. அவரிடம் பொற்கிழி வாங்கி பங்களா கட்டும் எண்ணம் மீடியா நண்பர்களுக்கும் இல்லை. அவர் செய்யும் நல்லதையும், அவர் திரையுலகத்திற்கு ஏற்படுத்தும் சிக்கல்களையும் அவ்வப்போது நேர்மையாக எழுதி வந்தவன் என்ற முறையில் உங்கள் கருத்தை மறுக்கிறேன். நன்றி. ஆர்.எஸ்.அந்தணன்

 2. sandy says

  ஆமா.. அஜித் தமிழன் இல்ல தான்..100% மலையாளி தான்… என்னைக்காவது நான் தமிழண்டான்னு சொல்லி இருக்கறா.. அஜித் நல்ல மனுஷன்..
  யாரா வேனும்ன இருதுட்டு போகட்டும்.. படத்த பாத்தமா பஞ்சாயத்த கூட்டமா வீட்டுக்கு போனமான்னு இல்லாம…. எங்க பாத்தாலும் சண்டைய போட்டுக்கிட்டு .. நம்மள நம்மளையே ஏமாத்திக்கிட்டு இருக்கோம்….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாபநாசம் படத்திற்கு வரிவிலக்கு தராதது அரசின் சரியான முடிவுதான்! -கமல் பதிலால் பரபரப்பு

பாபநாசம் படத்திற்கு ஊடகங்களின் உற்சாகமான விமர்சனங்களால், கலெக்ஷனும் எதிர்பார்த்ததை விட பிரமாதமாம்! படத்தின் வெற்றிக்கு ஊடகங்களும் ஒரு காரணம் என்பதால் இன்று அத்தனை பேரையும் சந்தித்து தன்...

Close