சென்னை திரும்பினார் எஸ்.ஏ.சி! விஜய் அட்வைஸ் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடக்கம்?
“ஃபீல்டு பாட்டுக்கு இருக்கட்டும்… வேல்டுல எங்க வேணும்னாலும் போங்க. சந்தோஷமா இருங்க. படம் எடுக்குறேன்னு ஏன் டென்ஷன் ஆவுறீங்க?” அப்பா எஸ்.ஏ.சி க்கு அவரது மகன் விஜய் சொல்லும் அதிகபட்ச அட்வைஸ் இதுதான். ஆனால் கேட்டால்தானே? நானே ஹீரோவாக நடிப்பேன் என்பார். தென்னகத்தின் அமிதாப்பச்சன் என்று யாரையாவது விட்டு பேச சொல்வார். இப்படி பரபரப்புக்கு பக்கத்திலேயே நிற்பதுதான் எஸ்.ஏ.சிக்கு பிடித்திருக்கிறது.
சும்மாயில்லாமல் ஏதோ கதை விவாதத்திற்காக கேரளாவிலிருக்கும் குமரகத்திற்கு போனவர் அங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் பலத்த சேதாரம். உடனடியாக சென்னைக்கு வந்தால், விசாரிக்கிறேன் பேர்வழி என்று கூட்டம் வரும். அப்படி வருகிறவர்கள் ஆளுக்கு ஒன்றாக கிளப்பி விடுவார்கள். அவரால் இனி ஜென்மத்திற்கும் நடக்கவே முடியாது என்றெல்லாம் கூட கதை கட்டி விடுவார்கள் என்பதால், அங்கேயே தங்கி ஃபுல் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
கடந்த வாரம் சைலன்ட்டாக சென்னைக்கு திரும்பிவிட்டார் எஸ்.ஏ.சி. “இனிமேலாச்சும் நான் சொல்றதை கேளுங்கப்பா. எங்கேயும் போகாதீங்க. நிறைய படங்கள் பாருங்க. பேரன்களுடன் அரட்டை அடிங்க. போர் அடிச்சா ஃபாரின் போங்க” என்று கூறி வைத்திருக்கிறாராம் விஜய்.
எனவே இன்னும் சில நாட்களுக்கு எஸ்.ஏ.சி யிடம் இருந்து புதுப்பட அறிவிப்புகள் ஏதும் வராது என்பதை (மிகுந்த சந்தோஷத்துடன்) தெரிவித்துக் கொள்கிறோம்.
To listen audio click below :-