விஜய்க்கு அஜீத் அட்வைஸ்! கேட்பாரா அவர்?
Harley Davidson! நடிகர் விஜய் வாங்கியிருக்கும் புது பைக்தான் இது. பெருகி வரும் டிராபிக் காரணமா, அல்லது ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே என்றா, தெரியவில்லை. இப்போதெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் பைக்கிலும், சைக்கிளிலும் படப்பிடிப்புக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்கிற அச்சம் வருமே? மண்ணாங்கட்டி! முகத்திற்கு ஒரு ஹெல்மெட் போட்டுக் கொண்டால் போச்சு.
இப்படிதான் ஆர்யா தினந்தோறும் படப்பிடிப்புக்கு சைக்கிளில் வருகிறார். உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆச்சு என்பதால்தான் இந்த சைக்கிள் பயணம். சூர்யா ஓய்வில் இருந்தால், குழந்தைகளை பைக்கில் அழைத்துச் சென்று பள்ளிக்கூடத்தில் விடுவது அவரேதான்.
அஜீத் சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பைக்கை எடுத்துக் கொண்டு அசால்ட்டாக பெங்களூர் வரைக்கும் கிளம்பி விடுகிறார். அந்த ஹைவேஸ் ரோடுதான் ச்சும்மா வெண்ணை மாதிரி ஸ்மூத்தாக இருக்கிறதாம். அந்த வரிசையில் இப்போது விஜய். நீலாங்கரை வீட்டிலிருந்து பத்து நிமிட பயணத்தில் தற்போது போடப்பட்டிருக்கும் மாரீசன் பட செட்டுக்கு வந்துவிடுகிறார். இந்த செட் ஆதித்யாராம் பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டுள்ளது. படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார் என்பதுதான் உங்களுக்கு தெரியுமே?
தினமும் முகத்தில் கர்சீப்பை கட்டிக் கொண்டு வீட்டிலிருந்து Harley Davidson பைக்கில் கிளம்பிவிடுகிறார் விஜய். பலரும் அவரை சடக்கென்கிற வினாடியில் அடையாளம் கண்டு கொண்டு துரத்தினாலும், மின்னல் வேகத்தில் அவர் கடந்து விடுவதால், ‘வட போச்சே’ எபெஃக்ட்டோடு திரும்புகிறார்கள். விஜய் இப்படி தினமும் பைக்கில் செல்கிற தகவலை கேள்விப்பட்ட அஜீத், ‘ஹெல்மெட் போட்டுகிட்டு டிராவல் பண்ணுங்க’ என்று போன் பண்ணி அட்வைசித்ததாக தகவல்.
அஜீத் வழியில் விஜய் நடந்தா ஆபத்து ஏன் வருது?

