தலைப்பு ரெடி… ஆனால்? அஜீத் போடும் முட்டுக்கட்டை!
தலைப்பு ரெடி! ஆனால் அஜீத் என்ன சொல்கிறார்? ஆவலோடு காத்திருந்த கவுதம் வாசுதேவ மேனனுக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கும் ஏக திருப்தி. ஏனென்றால் இவர்கள் சொன்ன அந்த தலைப்பை மனப்பூர்வமாக டிக் அடித்துவிட்டாராம் அஜீத். அப்புறமென்ன? அறிவித்துவிட வேண்டியதுதானே…?
அங்குதான் ஒரு ஸ்பீட் பிரேக் போட்டிருக்கிறார் ஹீரோ. ‘என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே’ என்றவர் அதற்கான காரணத்தையும் தெள்ளந்தெளிவாக எடுத்து சொன்னபோது ‘ஆமென்’ என்று கூறிவிட்டு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்கள் இருவரும். ‘சினிமா ரசிகர்களின் இப்போதைய பரபரப்பு ஐ தான். அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்து முடியட்டும். நாம் இப்போது தலைப்பை அறிவித்தால், மீடியாக்கள் அதுபற்றியும் எழுத ஆரம்பிப்பார்கள். இரு புறத்திலும் ரசிகர்களின் கவனம் சிதறும். அதனால் ஐ சலசலப்பு ஓய்ந்தவுடன், நமது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு நாள் குறிப்போம் அல்லவா? அதற்கு சில தினங்களுக்கு முன் அறிவிக்கலாம்’ என்றாராம்.
விளம்பரத்தில் கூட அடுத்தவர் நலம் பார்க்கிறாரே என்று வியந்தார்களாம் இருவரும். ( நம்பிட்டோம்…! )