அஜீத் பண்ணுறது கொஞ்சம் கூட நியாயமில்ல…! புலம்பும் புண்ணியகோடிகள்!

சிறுத்தை சிவா இயக்குகிற படத்திற்காக இத்தாலிக்கு போயிருக்கிறார்கள் அஜீத்தும், ஸ்ருதிஹாசனும். போன இடத்தில் அவர் பண்ணிய க்ளிக் க்ளிக்ஸ்தான் இப்போது பிரச்சனையே? பொதுவாக படப்பிடிப்புக்காக வெளிநாடு போவதே, விதவிதமான லொகேஷன்களுக்காக மட்டுமல்ல, படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு வரவும்தான். இங்கு கேரவேன் கதவை தட்டி, ‘நல்லாயிருக்கீங்களா?’ என்கிற தொந்தரவெல்லாம் வெளிநாட்டுக்கு போய்விட்டால் அறவே இல்லை. சில நாடுகளில் சூரியனும் ஒத்துழைப்பான். இங்கு ஆறு அல்லது ஏழு மணி நேரம் நடக்கும் படப்பிடிப்புகள் வெளிநாட்டுக்கு போனால் 20 மணி நேரங்கள் கூட நடக்கும். எல்லாம் வெளிச்சம் தரும் வரம்.

இதில் ஏதோ ஒரு காரணத்திற்காகதான் இத்தாலிக்கு போயிருக்க வேண்டும் அஜீத் அண் டீம்ஸ். ஆனால் போன இடத்திலும் படப்பிடிப்பு குழுவினரை வேலை பார்க்க விடாமல் உடன் நடிக்கும் நடிகர்களையும் நடிகைகளையும் அஜீத் படமெடுத்து தள்ளிக் கொண்டிருந்தால் என்னாவது? என்று இங்கிருக்கும் சில விமர்சகர்கள் புலம்புகிறார்கள்.

ஆனால் நிஜத்தில் அஜீத் அற்புதமான புகைப்பட கலைஞர். இப்படி புகைப்படம் எடுக்கும் வேலையை அவர் இன்று நேற்றல்ல… பல வருடங்களாகவே செய்து வருகிறார். அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு கண்காட்சியாகவும் வைக்க திட்டமிட்டிருக்கிறார். இங்கு சென்னையிலேயே விதவிதமான படங்களை எடுத்துத்தள்ளும் அவர் இத்தாலி போய்விட்ட பிறகு சும்மாயிருப்பாரா என்று இன்னொரு குரலும் கேட்கிறது இங்கே.

இதற்கிடையில் அப்புக்குட்டியை அவர் படம் எடுத்தாரல்லவா? அது அஜீத்தே தன் பப்ளிசிடிக்காக செய்து கொண்ட வேலை என்று முணுமுணுத்த வேறொரு கோஷ்டி, அப்புகுட்டி ஸ்டில்கள் பத்துதான் வந்தது. ஆனால் அஜீத் அவரை படமெடுக்கும் ஸ்டில்கள்தான் அதைவிட அதிகம் என்று கிண்டல் செய்தது. ஆனால் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்… வையகம் இதுதானாடா என்று தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜீத். எதற்கும் கவலைப்படாமல் இந்த இத்தாலி ஷுட்டிங்கில் ஸ்ருதிஹாசனை வளைத்து வளைத்து படம் எடுத்துத்தள்ளியிருக்கிறார்.

சொல்றவங்க பேசுறவங்க புலம்புறவங்க எல்லாரும் ஷிப்ட் போட்டு புலம்பினாலும், அதெல்லாம் அஜீத்திற்கு கேட்கவா போகிறது?

Read previous post:
ரொம்ப நல்ல கம்பெனி… அது மேல பழி போடறதா? விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு! ’

சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவனுக்கு முன்னணி நாளிதழ் நிருபர் ஒருவர் போன் அடித்தார். ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்ஸ் க்கு பிறகு எதிர்முனையில் சிம்புதேவன் யெஸ் சொல்ல, நான் இன்னாரு...

Close