படுத்த படுக்கையில் முன்னாள் காட்ஃபாதர்! அஞ்சலி என்ன செய்யப் போறீங்க?

காற்று அஞ்சலி பக்கம் அடிக்கும் நேரம் போலிருக்கிறது. சித்தியால் விரட்டப்பட்ட அஞ்சலி, டைரக்டர் மு.களஞ்சியத்தால் மிரட்டப்பட்டதையும் நாடறியும். எப்படியோ தப்பித்து ஆந்திராவில் தஞ்சமடைந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு பர்தா அணிந்து மறைந்து மறைந்து வந்த நாட்களுக்கும் ஒரு முடிவு கட்டியது கடந்த சில வாரங்கள். சுராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ‘படப்பிடிப்பை ஆந்திராவில் வச்சுகிட்டா எனக்கு பாதுகாப்பா இருக்கும்’ என்று அஞ்சலி விரும்ப, ‘அதே பாதுகாப்பு உங்களுக்கு இங்கேயும் கிடைக்கும். அதுக்கு நாங்க உத்தரவாதம் தர்றோம்’ என்று அழைத்து வந்தார்கள்.

சொன்னபடியே, ‘அவர் நின்றால், நடந்தால், படுத்தால், பல் விளக்க போனால்’ என்று சுற்றி சுற்றி ஆட்கள் நிறுத்தப்பட்டார்கள். இந்த நவீன சிறைவாசத்தை பொறுக்க முடியாமல் அனுபவித்து வந்த அஞ்சலிக்கு மு.களஞ்சியம் விபத்தில் படு காயமுற்ற செய்தி என்ன மாதிரியான மன நிலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. இத்தனைக்கும் அதே சித்தி மகனின் கல்யாணத்திற்குதான் ஆந்திராவுக்கு காரில் சென்றார் மு.களஞ்சியம். போன இடத்தில்தான் படுகாயம் ஏற்படுத்துகிற அளவுக்கு இந்த விபத்து.

நிற்க… இப்போதைய நிலவரம்? மு.களஞ்சியத்திற்கு உடல் நிலை படு மோசமாக இருக்கிறதாம். அவர் உயிர் பிழைப்பாரா என்கிற அளவுக்கு சந்தேகம் கிளப்புகிறார்கள் அவரை சுற்றியிருப்பவர்கள். தற்போது அவசர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார் அவர். லட்சம் லட்சமாக செலவாகும் போலிருக்கிறது. எல்லா பணத்தையும் அவர் எடுத்து வரும் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில்தான் போட்டிருக்கிறாராம். நிறைய கடன் வாங்கியும் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அஞ்சலியுடன் நல்ல நட்பில் இருந்தபோது துவங்கப்பட்ட படம் இது. அந்த நேரத்தில் அஞ்சலியின் காட் ஃபாதரே இவர்தான் என்று பலராலும் நம்பப்பட்ட அஞ்சலி, மு.களஞ்சியத்திடம் பணம் வாங்கிக் கொண்டா நடித்திருப்பார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

‘அஞ்சலி… நீங்க வாங்கிய அட்வான்சையாவது திருப்பி கொடுங்க. அது மு.களஞ்சியத்தின் சிகிச்சைக்கு பயன்படும்’ என்று சென்ட்டிமென்ட் கிளப்புகிறார்கள் அவரை சுற்றியிருப்பவர்கள். உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

‘அஞ்சலி… என்ன செய்யப் போறீங்க?’

1 Comment
  1. பிம்பிடிக்கி பிளாப்பி says

    ஒருவேள செத்தா அஞ்சலி செலுத்த வருவாங்க.. களஞ்சியம் ஒரு மொள்ளமாரி, கடவுளா பார்த்து ஒரு தண்டனை குடுத்து இருக்கான்.. பெண் சாபம் பொல்லாது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Nalla Kettuka Paadam Official Full Video Song | Aadama Jaichomada

http://youtu.be/Kkf0KPgwVhE

Close