அல்டிமேட் மின்னல் அஞ்சலியின் நிலைமை இப்படியா ஆகணும்?
காஷ்மீர்ல விளைஞ்ச ஆப்பிளா இருந்தாலும், காசி தியேட்டர் வாசல்ல வச்சு விற்கப்படணும்னு விதியிருந்தா அதை யாரால மாற்ற முடியும்? அழகுச்சிலை, அல்டிமேட் மின்னல், அடங்கா குல்பி என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஞ்சலிக்கு இப்போது கொழுத்த ராவு காலம்.
கடந்த இரண்டு வருடங்களாகவே தமிழ்நாடு பக்கம் தலை வைத்துக் கூட படுக்க முடியாதளவுக்கு சித்ரவதைக்கு ஆளாகியிருக்கும் அஞ்சலி, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அண்டார்டிகாவில் ஷட்டில் ஆடிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் ஏகப்பட்ட வதந்தி. அதை நிஜமாக்குவது போல அவரை தொடர்பு கொள்ள நினைத்த பிரஸ்சுக்கும் முட்டு சந்தில் சிக்கிக் கொண்ட மாதிரியான பதில்தான் வந்து தொலைத்தது. எப்படியோ, பேக் டூ ஆந்திரா என்று அங்கே வந்து செட்டில் ஆகிவிட்டாராம் அவர்.
பிரச்சனை கிளம்பி பரபரப்பான பொழுதுகளில் அரவணைத்த பெரிய பெரிய ஹீரோக்கள் கூட இப்போது அவரை கண்டு கொள்வதில்லை. தமிழ் இல்லேன்னா ஆந்திரா என்ற நம்பிக்கையில் சிறகு விரித்த அஞ்சலிக்கு, ஹீரோக்களின் பாராமுகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக கிசுகிசுக்கிறார்கள் ஆந்திரா செய்தியாளர்கள். அப்படியென்றால் அஞ்சலியின் சர்விவெல் எப்படி?
சிரிப்பு நடிகர் சீனிவாச ரெட்டி மட்டும் தனக்கு ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைத்திருக்கிறார் ஒரு படத்தில். அப்படின்னா… டிக்கெட் கவுன்ட்டரை மூடிட்டாங்களா? அடக்கடவுளே….