விஜய் வெறுப்பு… அட்லீயின் ஆசை அவுட்!
வேகமாக எந்த ஹீரோ வளர்ந்தாலும், முதுகில் ஒரு செல்லத்தட்டு தட்டி(?), “கொஞ்சம் அடங்குறீயா” என்பார்கள் போலிருக்கிறது இங்கே! அதுவும் அந்த இம்சையை சற்று அதிகமாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருபுறம் தனுஷ் இவரை அடக்க நினைக்க, இன்னொரு புறம் விஜய்யும் அத்தகைய அலப்பறையை மேற் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படி? ஏன்?
அட்லீ இயக்குகிற புதிய படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, அட்லீ பற்றிய செய்தி ஒன்று காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்தது. அதாவது, இந்த படத்தை முடித்துவிட்டு அட்லீயின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்பதுதான் அந்த தகவல். அதற்கு இன்னும் வலு சேர்ப்பது போல அமைந்திருக்கிறது அட்லீ-சிவா பிளாஷ்பேக்கும்.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக வருவதற்கு முன்பிலிருந்தே அட்லீயும் அவரும் நல்ல நண்பர்களாம். அவ்வளவு ஏன்? ராஜா ராணி படத்திலேயே ஆர்யாவுக்கு பதிலாக நடிக்க வேண்டியவர் சிவகார்த்திகேயன்தானாம். என்னவோ, காலம் ஒரு கணக்குப் போட அட்லீ ஒரு திசையும் சிவா ஒரு திசையுமாய் பறந்து அவரவர் தகுதியை அவரவர் வளர்த்துக் கொண்டார்கள். இவ்வளவு பின்னணி உள்ள இருவரும் சேர்ந்து ஒரு படத்தை தருவதுதானே சரியாக இருக்கும்? ஆனால் இருக்க விடாமல் பார்த்துக் கொண்டாராம் விஜய்.
அட்லீயிடம் சொல்லி அந்த படத்திலிருந்து பின் வாங்க வைத்துவிட்டதாக தகவல்கள் கசிகின்றன. அப்படியே அட்லீ சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் தர ஆசைப்பட்டாலும், அது உடனடியாக நடக்காது போலிருக்கிறது.
Vijay ku munadi Sivakarthi oru aley illa.Vijay ipdi panna chance um illai.. Yen thevai illama negative ah oru news ah spread panreenga.
Vijay is the only decent guy in Tanmil cinema. there is no opponent for Vijay in this industry..Thalapathy is a king of kollywood.. he is nor doing any bad….
This article lacks nothing but logic. Atlee will not do all his movies with VJ. Once VJ59 is over, he has to do movies with some other actors only. How come VJ influence Atlee in that?
Vijay silra paiyan .ellarukkum therinja visayam thana