அஜீத் சார் இருந்தும் அப்படி நடந்துருச்சே? ஒரு தாங்கொணா அதிர்ச்சி!

எல்லாம் இந்த ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் பஞ்சாயத்துதான்!

படத்துக்கு ‘வசூல்’ என்று பேர் வச்சுருக்கோம். நீங்க உருப்படியா ஒரு தலைப்பு சொல்லலேன்னா நாங்க அதை அறிவிக்கிறதை தவிர வேறு வழியில்லை. இப்படி ஒரு தகவல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தரப்பிலிருந்து வந்ததும்தான் அதிரிபுதிரியாக ஒரு முடிவுக்கு வந்தார் கவுதம் மேனன். உடனடியாக ‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. படத்தில் ஆறு பாடல்கள். இன்னும் மூன்று பாடல்களை இனிமேல்தான் கம்போஸ் செய்ய வேண்டும். ஹாரிஸ் ஜெயராஜ், அனேகனில் பிசியாகிவிட்டதால் மூன்று பாடல்களும் பெண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஹாரிசுக்கு போக வேண்டிய ‘வைட்டமின் எம்’ இன்னும் போய் சேரவில்லையாம். அதன் காரணமாகவும் பாடல் கிடைப்பதில் சிக்கல்.

இந்த ஆறில் ஒன்று பயணப் பாடல். இதற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று யோசித்திருந்தாராம் கவுதம். ஆனால் சுருக்குப் பை இன்னும் சுருங்கி போனதால், ‘உள்ளூர்லேயே எடுங்க’ என்றார்களாம். வேறு வழியில்லாமல் சென்னையிலிருந்து சிக்கிம் வரை இந்த பயணம் நடப்பதாக கதையை திருப்பி பாடலை எடுக்க கிளம்பினார் கவுதம். 12 நாட்கள் தேவைப்படும் என்று அவர் போட்ட கணக்கையும் நேர் செய்து ‘எட்டு நாளில் முடிங்க’ என்று உத்தரவு வந்ததாம். சிக்கிம் கிளம்பினார்கள். நினைத்தபடி எடுக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கு நிறைவாக முடித்துவிட்டு கிளம்ப எத்தனித்தது படக்குழு.

ஷுட்டிங் முடிந்தவுடனேயே சென்னைக்கு கிளம்பிவிட்டாராம் அஜீத். பொதுவாக எப்போதும் அவரிடம் ஒரு பழக்கம் உண்டு. சக தொழிலாளர்களிடம், ‘உங்களுக்கு எல்லா வசதியும் செய்யப்பட்டிருக்கா? சாப்பாடு நல்லாயிருக்கா? ரூம் வசதி ஓ.கே வா?’ என்றெல்லாம் கேட்பாராம். இந்த முறை எதையும் கேட்காமல் கிளம்பிவிட்டாராம். கடைசி நேரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பயணப்படி வழங்கப்படவில்லை. சரியான சாப்பாடும் தரப்படவில்லை. பாதி வயிறோடு சென்னை திரும்ப தயாராகிவிட்டாலும், ரயில் டிக்கெட் கூட வந்து சேரவில்லையாம். கவுதம் கொடுப்பாரு. வாங்கிட்டு வந்து சேருங்க என்று என்று சென்னையிலிருந்து தகவல் போனதாம். எல்லாரும் கவுதமை சூழ்ந்து கொள்ள, பதறிப்போனாராம் மனுஷன்.

எப்படியோ? கையிலிருந்ததை சேர்த்துப்போட்டு அத்தனை பேரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தாராம் கவுதம். ‘பசியும் பட்டினியுமாக வந்து சேர்ந்தோம். அஜீத் சார் படத்தில் இப்படியொரு எக்ஸ்பீரியன்ஸ் யாருக்கும் வந்திருக்காது. இனிமேலும் வரக்கூடாது’ என்று குமுறுகிறது தொழிலாளர் வட்டாரம். அவர்கள் கவலையெல்லாம் ‘அஜீத் சார் படத்திலேயே இப்படி நடக்குதே? சார் கண்டுக்க மாட்டாரா?’ என்பதுதான்!

1 Comment
  1. sekar says

    நல்ல விஷயம் நடந்தா அஜித் சாரால நடந்துச்சு , வேற மாதிரி நடந்தா அவருக்கு தெரியாம நடந்துச்சு . என்னங்க உங்க Logic?.அவர் தான் படம் ஆரம்பிக்கும் போதே மொத்த சம்பள பணத்தையும் கரந்துடுராரே அப்புறம் எப்படி Producer கைல பணம் நிக்கும் .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வருண் மணியனுடன் திருமணமா? அது வதந்திங்க… த்ரிஷா மம்மி மறுப்பு

த்ரிஷாவுக்கு இனிமேலும் கல்யாணம் தள்ளிப் போனால், தமிழனின் மனசு என்ன பாடு படுமோ? இன்று அவரது திருமண செய்தியை அவருக்கே தெரியாமல் வெளியிட்டுவிட்டது மீடியா. பிரபல தொழிலதிபரும்,...

Close