வருண் மணியனுடன் திருமணமா? அது வதந்திங்க… த்ரிஷா மம்மி மறுப்பு

த்ரிஷாவுக்கு இனிமேலும் கல்யாணம் தள்ளிப் போனால், தமிழனின் மனசு என்ன பாடு படுமோ? இன்று அவரது திருமண செய்தியை அவருக்கே தெரியாமல் வெளியிட்டுவிட்டது மீடியா. பிரபல தொழிலதிபரும், வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான வருண் மணியனை த்ரிஷா மணக்கவிருப்பதாக தகவல் பரவிவிட்டது. விளக்கம் கேட்க த்ரிஷா மற்றும் அவரது அம்மா இருவரையும் தொடர்பு கொண்ட மீடியாவுக்கு செமத்தியான ஏமாற்றம். ஒருவருக்கும் சிக்கவில்லை அவர்கள்.

வருண் மணியனுக்கும் அவருக்கும் நேற்றே திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வருண் கடந்த பல மாதங்களாகவே த்ரிஷாவிடம் தன் காதலை தெரிவித்து வருவதாகவும், த்ரிஷாதான் பதில் சொல்லாமல் அமைதி காத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ராணாவுடன் காதலில் இருந்த த்ரிஷா, கடந்த சில மாதங்களாக அதே ராணாவால் புறக்கணிக்கப்பட்டார். செல்வ செழிப்பில் ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் இரண்டு ஏணியை கட்டி வைத்து நிறுத்தினாலும் எட்டாத உயரமாம். அது மட்டுமல்ல, கேரக்டர் ரீதியாகவும் ராணா நடந்து கொண்ட விதம் சமீபகாலமாக சரியில்லை என்று கவலை கொண்டிருந்தாராம் த்ரிஷா.

வருண் மணியனுடன் த்ரிஷா 

இந்த நேரத்தில்தான் வருண் மணியனை நோக்கி அவர் பார்வை திரும்பியதாக கூறப்படுகிறது. இதே வருண் மணியன், தமிழகத்தின் மிக முக்கிய குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார் என்பதும், பின்பு அதே பெண் மீது பண மோசடி வழக்கு தொடுத்தார் என்பதும் திரையுலகம் அறிந்த பரபரப்பு. வசதியில் பல 100 கோடிகளுக்கு அதிபதியாம் அவர். அவருக்கும் காதல் தோல்வி என்பதால், த்ரிஷா பச்சை கொடி காட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நடுவில் த்ரிஷாவுக்கும் விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் விக்ரமுக்கும், த்ரிஷாவுக்கும் விஷாலுக்கும்… என்று அவரை முன்னணி ஹீரோக்களுடன் இணைத்து வைத்து கும்மியடித்தார்கள் இங்கே. ‘என்னவோ போங்க. எனக்கான ரோஜா செடி வருண் வீட்ல பூத்திருக்கு’ என்று கூறி இந்த கிசுகிசுப்புக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொன்னான நேரம் இது. ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் ஒரு தகவல். தனது மீடியா நண்பர்களை திடீரென தொடர்பு கொண்ட த்ரிஷாவின் மம்மி, ‘காலையிலிருந்து வரும் செய்திகள் எதுவும் உண்மையில்ல. என் பொண்ணு யாரையும் காதலிக்கல. நிச்சயதார்த்தமும் நடக்கல’ என்று மறுத்திருக்கிறார்.

ஆனால் அதற்குள் செய்திகள் நாளிதழ்களில் பிரிண்ட் ஆகி, நாளைக்கு நாடே  ஒண்ணு கூடி கெட்டிமேளம் அடிக்கப் போவுது. ஸாரி… டூ லேட் மேடம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்பதான் புரியுது கஷ்டம்! நடிகர் விக்னேஷ் பேச்சால் பரபரப்பு

வெகு காலம் கழித்து நடிகர் விக்னேஷை ஒரு விழாவில் பார்க்க முடிந்தது. பந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் அது. சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் அவர் எப்படி...

Close