சூர்யா… கொஞ்சம் ஸ்டாப்யா! இது பாலா கட்டளை!

செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும் சூர்யாவை ஒரு வெந்து முடியாத வெந்தயத் தோசை போலவே பாவித்து வந்தது திரையுலகம். அந்த பால் வடியுற முகத்துக்கு ஆக்ஷன் செட்டாவாதே என்று முடிவெடுத்த இயக்குனர்கள், அதற்கேற்ற ரோல்களையே கொடுத்து வந்தார்கள். நல்லவேளை… ராமராஜன் பால் கறந்த மாதிரி கேரக்டர்களில் அவர் நடிப்பதற்கு முன் பாலாவின் பார்வை பட்டது. நந்தா வந்தது.

கட்… அதற்கப்புறம் சூர்யாவே நினைத்தாலும், ஆக்ஷன் குறைவான வேடங்களில் நடிக்க முடியாதோ என்கிற அளவுக்கு அவரை தள்ளிக் கொண்டு போகிறது விதி. இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரப்போகும் பசங்க 2 வேண்டுமானால் அந்த ஆக்ஷன் சுழலில் ஒரு ஆல விழுதை போடலாம்! இது ஒருபுறமிருக்க, சூர்யா நடித்து வரும் 24 என்ற படம் பொங்கல் ரிலீஸ் என்றுதான் முதலில் கணக்கிடப்பட்டதாம்.

“வர்ற பொங்கலுக்கு நம்ம தாரை தப்பட்டை வருதேப்பா… கொஞ்சம் தள்ளி வாயேன்” என்று பாலா கேட்டுக் கொள்ள, அய்யா கட்டளை. அடியேன் சரணம் ஆகிவிட்டார் சூர்யா. ஒரு ஹீரோவுக்கும் டைரக்டருக்குமான மட்டு மரியாதை இப்படியல்லாவோ இருக்க வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல் வீட்டுக்கு கரண்ட்! மனசு வைத்த மின்வாரியம்

பல நாட்களாக கரண்ட் இல்லை. கொசுக்கடி, துர்நாற்றம் இவற்றோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது பாதிக்கப்பட்ட சென்னைப் பகுதிகள் பல. இதில் கமல் வீட்டில் கரண்ட் இல்லையென்றால் யாருக்கு...

Close