விஜய் படத்தில் சார்மி? சுற்றி வளைத்து ஒரு சூப்பர் வாய்ப்பு
அழகுப்பெண் சார்மி தமிழ்சினிமாவை ஒரு கை பார்ப்பார் என்று அவரது அறிமுக நேரத்தில் வியந்து போனார்கள் ரசிகர்கள். ஆனால் ஒரு ‘கை’ இல்லை, ஒரு ‘விரல்’ அளவுக்கு கூட இங்கு ஒன்றையும் செய்யவில்லை அவர். இத்தனைக்கும் சிம்புவோடு அறிமுகமானவர்தான் அவர். சிம்புவுடன் யார் நடித்தாலும், அவர்கள் தானாக கிசுகிசுக்களில் அகப்பட்டு லைம் லைட்டில் குளிர் காய்ந்து கொண்டேயிருப்பார்கள் என்பது எழுதப்படாத விதி. அப்படிப்பட்ட சிம்புவுடைய வைத்தியத்திலேயே தேறவில்லை சார்மி. ஏன்?
இவ்வளவு காலம் கழித்து அதற்கும் விடை சொல்கிறார்கள் இங்கே. ஆனால் கமுக்கமாக! ‘அந்த பொண்ணு செம அழகுங்க. நல்லாவும் நடிக்குது. ஆனால் தங்கள் படத்தில் நடிக்கும் ஹீரோவிடம், ‘சார்மி டேட்ஸ் பிரியா இருக்கு. உங்களுக்கு ஜோடியாக்கிடலாமா?’ என்று எந்த இயக்குனர் கேட்டாலும், ‘வேற ஃபிரஷ்ஷா பாருங்க’ என்கிறார்களாம் அத்தனை பேரும் சொல்லி வைத்தது மாதிரி. இதாங்க அந்த பொண்ணோட மிஸ்டேக். யார் பார்ட்டிக்கு கூப்பிட்டாலும் போய் பழகிருச்சு. அநேகமாக இங்கு தமிழில் நடிச்ச எல்லா ஹீரோக்களும் சார்மிக்கு நல்ல ‘ஆழமான’ பழக்கம். அதனால் சார்மின்னாலே இவங்களுக்கு ஒரு பெப் வர மாட்டேங்குது. ‘அந்த புள்ளைதானே? நல்லா தெரியுமே’ என்பதோடு நிறுத்திக் கொள்றாங்க’ என்பதுதான் அவர்கள் சொல்லும் பெருக்கல் கூட்டல் கழித்தல் எதற்குள்ளும் அடங்காத விடை!
நல்ல வேளையாக இங்கிருக்கும் தமிழ் ஹீரோக்களையோ, ஆந்திராவிலிருக்கும் தெலுங்கு ஹீரோக்களையோ நம்பிதான் பிழைப்பு நடத்த வேண்டும் என்கிற நிலையில் இல்லை சார்மி. ஆந்திராவின் ‘இசை முரசு’ தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு காதலியாகிவிட்டார். இருவரும் கல்யாணம் செய்து கொள்வார்கள் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது இந்த டச்சிங் டச்சிங். இதையடுத்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதை முதல் கட்டமாக குறைத்தும் இருக்கிறார் சார்மி. அவர் மீண்டும் தமிழில் நடிக்க அரியதோர் வாய்ப்பு ஒன்று இப்போது உருவாகியிருக்கிறது. சிம்பு தேவன் இயக்க, விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அதனால்…? படத்தில் சார்மியும் வந்தால் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.
அப்படீன்னா… ‘விஜய் படத்தில் சார்மி’ன்னு தலைப்பு வச்சுராலாமா? வைங்க வைங்க வைங்க….! நல்லா நாலு ஊருக்கு கேட்கிற மாதிரி வைங்க!
மிஷ்டர் அந்,
‘அவரு’ பிரஷ் பீசு கேக்கமாட்டாரா?
சுத்தி வளைச்சு என்னய்யா நியூசு இதெல்லாம்?
நீயி எழுதற கருமாந்தரத்தயெல்லாம் நாங்க படிக்கணும்மனு தலவிதி!