அமலுக்கு வந்தது தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட்! அவதியில் சேனல்? படப்பிடிப்புகள் ரத்து?
அந்த மூன்றெழுத்து சேனலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் செம டோஸ் விழுந்தது. பணத்தை அள்றது முழுக்க எங்க துறை ஆட்களை வைத்துக் கொண்டு. ஆனால் சேனலுக்கு படம் வாங்க மட்டும் கசக்குதா? வருஷத்துக்கு இத்தனை படங்கள் வாங்கலேன்னா உங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் போடும் என்று எச்சரிக்கப்பட்டது. அந்த சேனல் நடத்தவிருந்த பெரிய நிகழ்ச்சி ஒன்றையும் தடுக்க முற்பட்டது. இதில் பீதியடைந்த சேனல் தரப்பு ஓடோடி வந்து சரண்டர் ஆக, அப்போதைக்கு பிரச்சனை சால்வ்.
அந்த நிகழ்ச்சியும் அரை குறையாக நடந்தது. திரையுலக பிரமுகர்கள் பலரும் ஆப்சென்ட். ஏகப்பட்ட குளறுபடிகளுடன் நடந்த அந்த விழாவுக்கு பின் சொன்னபடி படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை சேனல். ஏதோ… அன்றைய தினம் விழா நடந்தால் சரி என்பதற்காகவே ஒப்புக் கொண்ட மாதிரி உணர்ந்தது சங்கமும். வேறு வழியில்லை. மறுபடியும் சாட்டையை எடுத்துவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவர்கள், நேற்று அந்த அதிரடியை ஆரம்பித்து வைத்தார்கள்.
பெப்சி தொழிலாளர்கள்தானே சின்னத்திரையிலும் வேலை பார்க்கிறார்கள். நேற்று அத்தனை பேரையும் ரிட்டர்ன் வரச் சொன்னது தயாரிப்பாளர் சங்கம். உடனடியாக படப்பிடிப்பு தளத்திலிருந்து அவர்கள் வெளியேற, இரண்டு மூன்று நிகழ்ச்சிகளின் ஷுட்டிங்கே ரத்து ஆகிவிட்டது.
இன்று மாலை தயாரிப்பாளர் சங்க செயற்குழுவின் அவசரக்கூட்டம். என்ன முடிவு எடுப்பார்களோ?