காங்கிரசுக்கு ‘ காரியம் ’ பண்ணிய மல்லிகாஷெராவத்!

போகிற போக்கை பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு ‘காரியம்’ செய்யாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே மூக்கெல்லாம் அடிபட்டு முன் பக்கம் முழுக்க பிளாஸ்திரியோடு திரிகிறது காங்கிரஸ். இந்த லட்சணத்தில் மல்லிகா ஷெராவத் டிரஸ் இல்லாத உடம்பில் காங்கிரஸ் கொடியை போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை போலவும் அவர் கையில் ஒரு சிடி இருப்பது போலவும் ஒரு போஸ்டர் அடித்து டெல்லியை கலக்கியிருக்கிறார்கள் ஒரு புதுப்படத்திற்காக. பின்னணியில் ராஜஸ்தான் மாநில சட்டசபை கட்டிடம் இருப்பதால், அரசியல் களமே சூடாகிக் கிடக்கிறது.

இது தேசியக் கொடி. அதை அவமதித்த மல்லிகா ஷெராவத்தை உள்ளே தள்ளு என்று விஷயத்தை திசை திருப்பவும் ஒரு கும்பல் தயாராக இருக்க, அதில் எங்கய்யா சக்கரம் இருக்கு. காட்டு… என்கிறார் படத்தின் இயக்குனர் பொக்காடியா. யோவ்… படத்துல எதையெல்லாம் தேடணுமோ, அதை விட்டுட்டு மூவர்ண கொடி எங்கே இருக்குன்னு தேடுற நிலைமையிலா இருக்கான் ரசிகன்? என்று இன்னொரு பக்கம் இந்த போஸ்டரின் மேல் ஜொள் வடித்து திரிகிறது வேறொரு கூட்டம்.

டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற படத்திற்காக ஒரே நாளில் ஊரை கூட்டி பரபரப்பை கிளப்பி விட்டிருக்கும் இந்த போஸ்டருக்கு மகாராஷ்டிராவில் என்ன ரீயாக்ஷன்? மத்திய பிரதேசத்தில் என்ன ரீயாக்ஷன், மதராஸ்ல என்ன ரீயாக்ஷன் என்றெல்லாம் தனித்தனியாக பார்க்க தேவையில்லை. மல்லிகா ஷெராவத் மேலேயிருக்கும் கொடி பறக்காதா என்பதுதான் ரசிகனின் மாநிலம் கடந்த ஆசை. மற்றும் ஏக்கம்.

இப்படி கொடியிலேயே வெடி வக்குறானுங்களே….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏதோ… மனைவியால் முடிஞ்சது! நட்பை கெடுத்த உறவு

‘தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முன்பு போல கொடுப்பதில்லையாம்...’ இன்டஸ்ட்ரி முழுக்க பரவியிருக்கும் நட்பு வைரஸ் இதுதான். அதை நிரூபிப்பதை போல விஜய் சேதுபதியை தனது தயாரிப்பில்...

Close