தாய் எட்டடி…! குட்டி எட்டு சென்ட்டிமீட்டர்?

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி ஏழு சென்ட்டி மீட்டர் எட்டி நடக்கறதுக்கே ‘யம்மாடியாகிற’ கதை நம்ம இன்டஸ்ட்ரியில் சர்வ சாதாரணம். ஆறேழு ஹிட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து இன்டஸ்ட்ரியை இனிப்பாக்கிய கே.பாக்யராஜின் வாரிசு, இன்னும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் லெவலை கூட தாண்டவில்லை. என் இனிய தமிழ் மக்களே… என்று ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒரு காலத்தில் வியக்க வைத்த பாரதிராஜாவின் வாரிசு, இன்னும் பாதி ராஜாவை கூட எட்டி பிடிக்கவில்லை தொழிலில். நடிப்பாகட்டும்… இசையாகட்டும்… இயக்கம் ஆகட்டும்… எல்லாவற்றிலும் முட்டை மார்க் வாங்கதான் போட்டி போடுகிறார்கள் இந்த வாரிசுகள்.

‘வைகை காற்றே நில்லு வஞ்சிதனை பார்த்தா சொல்லு’ என்று ஒரு பாடலில் மட்டுமல்ல, ஒரு நுறு பாடல்களில் மெலடியால் குலுக்கிய டி.ராஜேந்தரின் வாரிசான குறளரசன் ஒரு படத்தில் கமிட்டாகி அதில் இன்னும் இரண்டு பாடல்கள் மிச்சமாம். அதையும் போட்டு தருவதற்குள் கோட் பட்டன் வெடிக்கிற அளவுக்கு குமுறுகிறாராம்.

‘இது நம்ம ஆளு’ என்று சிம்பு நயன்தாரா நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் பல வருடங்களாக (!) இயக்கி வரு………….கிறார் அல்லவா? அந்த படத்தில்தான் இந்த கூத்து. படமே முழுசாக முடிந்துவிட்டதாம். குறள் அந்த இரண்டு பாடல்களை போட்டுக் கொடுத்துவிட்டால், ‘குத்துவிளக்கை கழுவுனமா, வத்திக்குச்சியை பொருத்துனோமா’ என்று ஒளியை நிரப்பிவிட்டு நடையை கட்டலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கிறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போம்?

‘நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போமே’ என்று கிளம்பிவரும் ஒரு கூட்டம். அப்படி கிளம்பிய ஒரு கூட்டம்தான் சிசிஎல் என்று சொன்னால் கூட தவறில்லை....

Close