அப்படியா நினைச்சீங்க என்னை? பிரதர்ஸ் மீது பெருங்கடுப்புடன் தனுஷ்!
பல வருட இடைவெளிக்கு பிறகு பால் குடம் வழிகிறது தனுஷின் மார்க்கெட்டில். ‘வேலையில்லா பட்டதாரி’ திரையிடப்பட்ட இடமெல்லாம் தீபாவளியாகியிருக்கிறது. கலெக்ஷனும் தாறுமாறாக குவிகிறது. இது போதாதா? நேற்றிரவே கூட்டாளிகளுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடிவிட்டார் தனுஷ். அந்த பார்ட்டியில் பேசப்பட்ட… இல்லையில்லை கோபப்பட்ட மிக முக்கியமான விஷயம் எது?
தனது படத்தை அன்டர் எஸ்டிமேட் செய்த சகோதரர்கள் பற்றிதானாம் அந்த கோபம். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு போட்டியாக களம் இறங்கிய படங்கள் இரண்டு. அதில் ஒரு படம் பிரதர்ஸ் வெளியிடுகிற படம். நியாயமாக இந்த படத்தை வரும் 25 ந் தேதிதான் வெளியிடுவதாக திட்டமாம் அவர்களுக்கு. ஆனால் அந்த தேதியில் சித்தார்த்தின் ‘ஜிகிர்தண்டா’ படம் திரைக்கு வரும் என்று செய்தியை கசிய விட்டார்கள். இந்த அறிந்ததும் திடுக்கிட்டு போன சகோதரர்கள் படத்தை ஒரு வாரம் முன்னாலேயே கொண்டு வந்துவிட்டார்கள்.
தப்பு இந்த முடிவெடுக்கிற வரைக்கும் கூட இல்லை. அதற்கப்புறம் அவர்கள் அடித்த கமென்ட்தான்… ‘தப்புய்யா. ரொம்ம்ம்ம்ம்ம்ப தப்பு’ என்று கண்களில் கோவப்பழம் ஏற்றியது தனுஷுக்கு. பிரதர்ஸ் உதிர்த்த பொன் முத்துக்கள் இதுதான். ‘எங்களுக்கு தனுஷின் வேலையில்லா பட்டதாரி பற்றி கூட கவலையில்ல. அந்த படம் தேறாது. ஆனால் ஜிகிர்தண்டா வந்தா கொஞ்சம் சிக்கலாதான் இருக்கும் போல. அதனால் ஒரு வாரம் முன்னாடியே வந்திடலாம்’
தனுஷும் சித்தார்த்தும் முதலில் ஒரு தராசிலேயே இல்லை. உண்மை அப்படியிருக்க, ‘தனுஷை கண்டு அச்சமில்லை, சித்தார்த் படத்து மேலதான் அச்சம்..’. என்று அவர்கள் கமென்ட் அடித்தால் எவ்வளவு கோபம் வரும் தனுஷுக்கு? எல்லா கோபத்தையும் தீயணைப்பு பாட்டில் மூலம் தீர்த்திருப்பார் அவரும் ஃபிரண்ட்சும். இருந்தாலும்… இந்த தீராப் புகைச்சலை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிடணும் இல்லையா? சொல்லியாச்!