உலகே மாயம் உஷார் தனுஷ்!

காத்தாடி ரிவர்ஸ்சில் சுற்றினாலும் காற்று வரும். என்றாலும் ரிவர்ஸ் காத்தாடியை எவர் வாங்குவார்? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு ஆளாகிவிட்டார். பல இடங்களில் டெபாசிட் காலி. ஒருபுறம் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிக்கப்படாத ரெட்! இன்னொருபுறம் நம்பியிருந்த தனுஷும் கைகழுவி விட்டுவிட்டாராம்.

தனுஷின் அடுத்த படமே கார்த்திக் சுப்புராஜுடன்தான். அந்த படத்தை தனுஷின் நிறுவனமே தயாரிப்பதாகவும் இருந்ததாம். ஆனால் திடீரென இந்த திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் தனுஷ். பொதுவாகவே ஹீரோக்கள் எந்த இயக்குனரிடமும், நீங்க வேண்டாம். உங்க படத்தில் நடிக்க விரும்பல என்றெல்லாம் சொல்லவே மாட்டார்கள். சொல்லாமல் கழுத்தறுக்கிற வித்தையை தெரிந்தால் மட்டுமே இங்கு காலம் தள்ள முடியும். ஒருவேளை நம்மால் புறக்கணிக்கப்பட்ட இயக்குனர் நாளை உலகம் புகழும் இயக்குனர் ஆகிவிட்டால், மறுபடியும் அவர் முகத்தில் முழிக்கணுமே? அதற்காகவாவது அகிம்சை முறையை கடைபிடிப்பார்கள். முடிந்தவரை ஏதாவது ஒரு இத்துப்போன காரணத்தை சொல்லி தட்டிக் கழிப்பார்கள்.

தனுஷும் அப்படிதான் செய்தாராம். நம்ம படத்தோட ஃபுல் ஸ்கிரிப்டையும் எனக்கு பைண்டிங் பண்ணப்பட்ட புத்தகமா கொடுத்துருங்க. நான் படிச்சுட்டு திருப்தியானதும் படப்பிடிப்புக்கு போகலாம் என்று கூறிவிட்டாராம். ஒரு ஹீரோ கதை என்ன, முழுசா சொல்லுங்க என்று கேட்டாலே தன் பிரஸ்டீஜ் என்னாவது என்று பதறுகிற வெயிட் இயக்குனர்கள், இப்படியெல்லாம் கேட்டால் என்னாவார்கள்? யெஸ்… போய்யா நீயும் உன் கண்டிஷனும் என்று ஓடிப்போய்விடுவார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் விடிய விடிய உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதப்போகிறாரா? அல்லது பாக்கெட்டில் இருக்கிற தனுஷ் போட்டோவை கிழித்து குப்பை தொட்டியில் வீசுவாரா? அது ஈகோவின் வெயிட்டை பொறுத்த விஷயம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னது சிம்புவுக்கு அம்மாவா நடிக்கணுமா? அட்வான்சை திருப்பி தந்த த்ரிஷா!

அன்பே ஆருயிரே படத்தில் நீங்க எனக்கு அம்மாவா நடிக்கணும் என்று எஸ்.ஜே.சூர்யா, அந்த காலத்து அழகி தேவயானியிடம் கேட்டபோது, அவர் தன் மனம் கவர்ந்த மணாளன் ராஜகுமாரனிடம்...

Close