பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா….”

“இலையை காட்டுனா பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா….” இந்த டயலாக்கை கபாலி ரஜினி ஸ்டைலில் ஒரு முறை சொல்லிப்பார்த்தால், தனுஷின் ஆத்திரம் புரியும். சும்மாவா சார் வருது ஆத்திரம்?

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, எந்த லெவலில் இருக்கிறது? விசாரித்தால், பெரிய கோழி முட்டையாக போடுகிறார்கள். என்னவாம்? பதினைந்து நாள் நடித்துக் கொடுத்ததோடு சரி. அதற்கப்புறம் தாடியை மிக நீட்டமாக வளர்த்துக் கொண்டு ‘வட சென்னை’ படத்தில் செட்டில் ஆகிவிட்டார் தனுஷ். அப்படின்னா எ.நோ.பா.தோ என்னாச்சு? அங்கதான்யா இந்த இலை ஆடு டயலாக்!

தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த கவுதம் மேனனிடம் தனுஷ் வைத்த ஒரே நிபந்தனை, எங்க அண்ணன் செல்வராகவனுக்கு நீங்க உங்க கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கணும் என்பதுதான். கன்றுக்குட்டி வாங்கினால், கறவை மாடு இலவசம் என்பதைப் போல, இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டார் கவுதம். இத்தனைக்கும் செல்வாவின் இன்றைய சந்தை மதிப்பு மிக மிக அடிமாடு லெவல்தான்! இருந்தாலும் எதையோ ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும் என்கிற சினிமானந்தா தத்துவம் கவுதம் மேனனை உசுப்பித்தள்ள நிபந்தனையை ஒப்புக் கொண்டு தனுஷின் கால்ஷீட்டை பெற்றுவிட்டார்.

செல்வா படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. இரண்டு நாட்கள் ஷுட்டிங்கும் நடந்தது. அதற்கப்புறம் அதை அப்படியே சுருட்டி மடக்கி ஓரமாக வைத்த கவுதம், தனுஷ் கால்ஷீட்டை பயன்படுத்த ஆரம்பித்தார். கண்ணாடியை காமிச்சு கண்ணை புடுங்குற வேலை நடக்குது என்பதை மட்டும் சற்று தாமதமாக உணர்ந்து கொண்ட தனுஷ், “முதல்ல அண்ணன் படத்தை முடிங்க. அப்புறம் தர்றேன் கால்ஷீட்டு” என்று வடசென்னை படத்திற்கு அர்ப்பணிக்க கிளம்பிவிட்டார்.

எந்த பாச்சாவும் பலிக்க மாட்டேங்குதே… அங்கே போனா சிம்பு சிலுப்புறார்… இங்கே வந்தால் தனுஷ் கிளப்புறார்… என்னய்யா பண்ணுறது? கவுதமின் டிராபிக் ஜாம் கிளியர் ஆவதற்கு ஏதாவது வழி சொல்லுங்க மக்கா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தில்லுக்கு துட்டு விமர்சனம்

பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு...

Close