பிளைட் சார்ஜ், ஸ்டார் ஓட்டலில் தங்க வைப்பு! அரை மணி நேர கூத்துக்காக நடிகைக்கு செலவழித்த இயக்குனர்
ஒரு படத்தை ஓட வைக்கதான் எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு? அவ்ளோ பெரிய இசை லெஜன்ட்டான இளையராஜாவே வர்றேன்னு சொல்லிட்டாரு. அப்புறமென்ன? காதும் காதும் வைத்த மாதிரி பாடல்களை வெளியிட்டு விட்டு போக வேண்டியதுதானே? “நீயும் வரணும்மா” என்று வலிய அழைத்து செலவுக்கு மேல் வைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு டைரக்டர். இத்தனைக்கும் அவரே தயாரிப்பாளர் என்பதால் ‘சகலமும் மன்னிப்பாயன…’
அண்மையில் நடந்த ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்குதான் இப்படியொரு சலுகை நடிகைக்கு வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், அப்படத்தின் ஹீரோயின் அக்ஷா பட்டுக்கு கொடுத்த அதிரி புதிரி மரியாதைதான் இது. நல்லபொண்ணு… இவ்ளோ செலவழிச்சு பெங்களூர்லேந்து வரவழைச்சிருக்காங்க. நாலு வார்த்தை பேசலேன்னா எப்படியிருக்கும்? சிறப்பாக பேசினார். “நான் இசைஞானி இளையராஜாவின் ரசிகை. என்னோட முதல் படத்துக்கு அவரே இசையமைச்சிருக்கார்னா அது என்னோட அதிர்ஷ்டம்” என்றார்.
கன்னடத்தில் இப்படத்தை போன வாரமே ரிலீஸ் பண்ணிவிட்டார்கள். தமிழில் இன்னும் சில தினங்களில் ரிலீஸ். ஏன் இந்த டிலே? வேறொன்றுமில்லை. அந்த மாநிலத்தில் க்ளீன் யு சர்டிபிகேட் கொடுத்து படத்தை வெளியிட பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். இங்குதான் “ம்ஹும்… முடியாது..” என்று ஒரே ரோதனை. “ஒரு ‘கட்’டுக்கு கூட ஓகே சொல்ல மாட்டேன். வேணும்னா ரிவைசிங் கமிட்டிக்கு போறேன்” என்றாராம் ஏஎம்ஆர் ரமேஷ். அங்கு போனால் செம டென்ஷன். இதோ அதோ என்று ஒரு மாதம் ஓட்டிவிட்டார்கள். அதற்கப்புறம் விஷயத்தை கேள்விப்பட்ட கங்கை அமரன், ஐயய்யோ இப்படியாகிருச்சே என்று உடனடியாக ஆக்ஷன் எடுத்திருக்கிறார். (இப்போது ரிவைசிங் கமிட்டி தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் அமரன். மற்றொருவர் எஸ்.வி.சேகர்)
ஒரு மெல்லிய கோடு, சின்ன ஸ்கிராச் கூட இல்லாமல் ஏப்ரல் 1 ந் தேதி திரைக்கு வருகிறது.