கிண்டலா பண்றீங்க? இந்தா பிடிங்க பாட்டு! ஹாரிஸ் ஜெயராஜின் பெருந்தன்மை!
ஓஹமசீயா… ஓமசீயா என்றொரு பாடலை கேட்பவர்கள் ‘அதென்னடா ஊர்ல இல்லாத லாங்குவேஜ்?’ என்று கலவரப்பட்டிருப்பார்கள். ஒருமுறை வெளிநாட்டுக்கு போயிருந்த ஹாரிஸ் அங்குள்ள விமான நிலைய அறிவிப்பில் கேட்ட வார்த்தைதான் அது. ஏதோ ஒரு டொமஸ்ட்டிக் லாங்குவேஜில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்களாம். அந்த வார்த்தையை அப்படியே கப்பென பிடித்து ஒரு படத்தின் பல்லவியாக வைத்துவிட்டார் ஹாரிஸ். பாட்டு பிச்சுகிச்சி. எல்லாருடைய ரிங்டோனிலும் ஓமஹசீயாதான் அந்த நேரத்தில்…!
அதை அப்படியே சுட்டு, தான் இயக்கிய ‘தமிழ்படம்’ படத்தில் ஒரு பாடலாக்கியிருந்தார் அப்படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன். இந்த வரிகள் மட்டுமல்ல, தமிழ் பாடல் வரிகளில் இப்படி அர்த்தமில்லாமல் வந்த எல்லா வார்த்தைகளையும் கோர்த்துப்போட்டு செம பாடல் ஒன்றாக அதை உருவாக்கியும் இருந்தார். ஆனால் அந்த பாடலின் முதல் வரி, ஓமஹசீயாதான். இப்படி தன்னை கிண்டல் செய்து ஒரு பாடலை உருவாக்கிய அமுதனை தன் போன் புக்கிலிருந்தே நீக்கியிருக்க வேண்டுமல்லவா?
அங்குதான் ஹாரிசின் பெருந்தன்மை, ‘உள்ளேன் ஐயா’ என்றது. அனேகன் படத்தில் இரண்டு பாடல்களை எழுத வைத்துவிட்டார் இந்த சி.எஸ்.அமுதனை அழைத்து! இரண்டு படங்களை இயக்கிய ஒரு இயக்குனர், அதுவும் அவர் படத்திலேயே பாடல் எழுதியிருக்காத ஒருவரை அழைத்து பாடல் எழுத வைத்தது எவ்வளவு பெரிய பெருந்தன்மை?
நல்லாயிருங்க ஹாரிஸ்!
c.s amuthan alreday wrote for him in minalee movie in 2011.
check this video from youtube from 21.:30 to 21:40
“actor dhanush new tamil movie anegan audio redpix”