இது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறேனா? ஹன்சிகாவின் காட்டமான பதில்!
அவிச்ச முட்டைக்கு ஆரஞ்சு கலர் பூசின மாதிரியிருக்கிறார் ஹன்சிகா! அரண்மனை 2 ன் பேய் ஹிட், ஹன்சிகாவை ஒரு சுற்று பெருக்க வைத்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் பொண்ணு டயட்! அப்படியிருந்தாலும் பேச்சுக்கு ஏது டயட்? நிறைய பேசிய ஹன்சிகாவை, நெருக்கிப் பிடிக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டால்தானே மனசு ஆறும். “இது நம்ம ஆளு படத்தில் நயன்தாரா இருக்காங்க. ஆன்ட்ரியா இருக்காங்க. அது போதாமல் உங்ககிட்டயும் ஒரு கெஸ்ட் ரோலுக்கு கால்ஷீட் கேட்கிறாங்களாமே?” இதுதான் கேள்வி.
“யாரு சொன்னா? அப்படியெல்லாம் யாரும் என்னை அப்ரோச் பண்ணல” என்றார் ஹன்சிகா. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது என்ற வார்த்தை ஹன்சிகாவின் பூ முகத்திற்கு ஒரு போதும் பொருந்தாது என்பதால் நெக்ஸ்ட்!
ஓ… ஒருவேளை நடிக்க கூப்பிட்டால் போவீங்களா? இங்குதான் பேய் முழி முழித்தது பொண்ணு. “நோ காமென்ட்ஸ்னு போட்டுக்கோங்க!”
முடியாது என்ற பதில் ஹன்சிகாவின் வாயிலிருந்து வராத வரைக்கும் இது நம்ம ஆளு படத்தில் எது வேணும்னாலும் நடக்கும் போலிருக்கிறது. அதற்கப்புறம் ஹன்சிகா பேசியதில் ஹாட் விஷயங்களுக்கு கடும் பஞ்சம்.
காதலர் தினம் வருது. யாருடன் எங்கு போகப் போறீங்க?
‘‘கண்டிப்பா அதை செலிபிரேட் பண்ணுவேன். ஆனால் நீங்க நினைக்கிற மாதிரியில்ல. என்னோட பெண் தோழிகளோட ஜாலியா அரட்டையடிக்கிற நாள் அது. மற்றபடி வேற எதுவும் அன்னைக்கு விசேஷமா நடக்காது. நம்புங்க” என்றார் ஹன்சிகா.
நம்பிட்டோம்!