லட்சுமிராய்- ஹன்சிகா குச்சுப்பிடி… குடுமிப்பிடி!

ஒரு படத்தில் ஒரு ஹீரோயின் இருந்தாலே ஆயிரம் ஈகோ பிரச்சனை வரும். ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் இருந்தால், ஊரே ரெண்டு பட வேண்டியதுதான்! தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் நிலவும் ஒற்றுமை உரசல் இது. கடந்த பல்லாண்டுகளாகவே இது போன்ற சங்கதிகளை பார்த்து பார்த்து பழகிய பிரஸ்காரர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் இந்த ஈகோ பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் நடிகைகளின் கதி? ஃபுல் ஆஃப் குவாட்டர் என்று ஈகோவுக்கு தகுந்த மாத்திரை தேவைப்படும் அவர்களுக்கு. இப்படியெல்லாம் வரும் பிரச்சனைகளை சமாளிக்கதான் அனுஷ்கா போன்றவர்கள் யோகாவை நாடுகிறார்களோ என்னவோ? போகட்டும்… விஷயத்திற்கு வருவோம்.

அரண்மனை படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவுக்கும், லட்சுமிராய்க்கும் செம மோதல் நடந்து வருகிறதாம். படத்தில் எல்லாருக்கும் ஈக்குவல் கேரக்டர்தான் என்று இயக்குனர் சுந்தர்சி கூறி வந்தாலும், என் கேரக்டருக்குதான் டைரக்டர் முக்கியத்துவம் கொடுக்கிறார். நீ டம்மி என்று ஒருவருக்கொருவர் வம்பளத்துக் கொள்கிறார்களாம். நான்தான் இந்த படத்தின் ஹீரோயின். என் பெயரை சொல்லிதான் பிசினசும் நடக்கிறது. நீ படத்தில் வரும் ஒரு கேரக்டர்தானே ஒழிய ஹீரோயின் இல்லை என்று ஹன்சிகா வார்த்தைகளை விட… ஆக்ரோஷப்பட்ட லட்சுமி சுந்தர்சிக்கே போன் அடித்து புலம்பியதாக கூறுகிறார்கள்.

யாருக்காகவும் யார் நடித்த பகுதிகளையும் நீக்க விரும்பாத சுந்தர்சி, கட்டிப்புரண்டு சண்டை போடுறதை நிறுத்துங்க. அவங்கவங்க உழைப்பு அப்படியேதான் வந்திருக்கு என்று இப்போதைக்கு ஆறுதலாக கூறியிருக்கிறாராம். அரண்மனை ரிலீஸ் நேரத்தில்தான் இருக்கு அண்டா உருள்ற சப்தம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘லிங்கா ’ க்ளைமாக்ஸ்… அண்டா அண்டாவாக தயாராகும் சாப்பாடு

ரஜினி, விஜய், அஜீத் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் வந்தால் யாருக்கு கொண்டாட்டமோ, இல்லையோ? ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று சொல்லப்படும் கிரவுட் புல்லிங் ஆசாமிகளுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்!...

Close