அதாண்டா சினிமா! ஹன்சிகாவுக்கு பாடம் புகட்டிய சிவகார்த்திகேயன்!

ஆஃப் பாயிலை ஆம்லெட் ஆக்கிய பெருமை ஹன்சிகாவையே சேரும். யெஸ்… சிவகார்த்தியேன் என்னதான் கலெக்ஷன் ஹீரோவாக இருந்தாலும், அவருடன் ஜோடி சேர்ந்த அழகிகள் யாரும் தினத்தந்தி அழகிகளுக்கு சற்று மேலே, பிலிம்பேர் அழகிகளுக்கு சற்று கீழேதான் இருந்தார்கள். அந்த நேரத்தில்தான் தன் இன்முகச் சிரிப்பை, பன்முக திறமை கொண்ட சிவகார்த்திகேயனுக்காக தாரை வார்க்க முன் வந்தார் ஹன்சிகா. மான்கராத்தே படத்தில் சிவகார்த்தியேனுடன் ஹன்சிகா ஜோடி சேரப் போகிறார் என்று தெரிந்ததுமே, அயர்ன் பாக்சை கொதிக்க வைத்து அதன் மீது குந்தினார்கள் கோடம்பாக்கத்தின் முன்னணி ஹீரோக்கள் சிலர். ஒரு சினிமா நிகழ்ச்சியில் கூட, ‘நான் என்னய்யா தப்பு பண்ணிட்டேன், ஹன்சிகா கூட ஜோடியா நடிக்க மட்டும்தானே செஞ்சேன்’ என்று அப்பாவியாய் அரற்றினார் சிவா. கட்…!

அந்த படத்திற்கப்புறம் ஹன்சிகாவுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் தொட்டு தொடராத ஒரு பட்டு பந்தம் உருவானது. சிவாவின் வெல் விஷர்களில் ஒருவர் ஆனார் ஹன்சிகா. இந்த நட்பை முறிக்க என்னதான் சிம்பு கொம்பு சீவினாலும், ஒன்றும் நடக்கவில்லை. இந்த நேரத்தில்தான் தனது நண்பனுக்காக ஒரு காரியம் செய்தார் ஹன்சிகா. ‘ஆம்பள’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சுந்தர்சியிடம் பேசி ‘சிவகார்த்திகேயனை வச்சு ஒரு படம் பண்ணுங்க’ என்று கேட்டுக் கொண்டார். ஹன்சிகாவே சொல்லியாச். அப்புறமென்ன? விறுவிறுவென களத்தில் இறங்கிய சுந்தர்சி, சிவாவை சந்தித்து கதை பேச, புராஜக்ட் ஐம்பது சதவீதத்தை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் சிவா ஒரு கண்டிஷன் வைத்தாராம்.

‘எனக்கு ஜோடியா ஹன்சிகா வேணாம். நயன்தாரா இருக்கட்டும்’ என்று. அவர் பிரச்சனை அவருக்கு. தனது தொழில் எதிரி விஜய் சேதுபதி நயன்தாராவுடன் நடித்து வரும்போது ‘நான் மட்டும் மிஸ் பண்ணினால் எப்படி?’ என்கிறாராம். இந்த தகவலை கேட்ட ஹன்சிகா அப்செட்!

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது… ‘ஹன்சிகா சவுக்யமா? ’

Read previous post:
அரை மணி நேர படம் கட்! லிங்கா விஷயத்தில் கே.எஸ்.ரவிகுமார் முடிவு

வெகு நீளமான படங்களின் அதோ கதி என்பதுதான் கடந்த கால எச்சரிக்கை. ஆனாலும் தங்கள் படத்தின் நீளத்தை எங்கும் குறைக்க முடியாது என்று மல்லுக்கு நிற்கும் இயக்குனர்களால்...

Close