டாப்ஸிக்கு கால்ஷீட் தந்தால் பைனான்ஸ் ரெடி! சிஇஓ வின் சீப் அப்ரோச்!

ஒரு நடிகையை ஒருவருக்கு பிடித்துப் போக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அல்லது ஒரே ஒரு காரணம் கூட இருக்கலாம். ஆனால் டாப்ஸியை அவருக்கு பிடித்துப் போக எத்தனை காரணங்கள் இருந்தனவோ, யார் கண்டது? ஆனால் தமிழ்சினிமாவில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்… ய அளவில் பைனான்ஸ் தந்து வருகிற மணியான ஒரு பைனான்சியரின் சிஇஓ போடுகிற கண்டிஷன் கதற வைக்கிறது கடன் வாங்குகிற தயாரிப்பாளர்களை. அவர்களாவது பரவாயில்லை. என் கதைக்கு இந்த நடிகைதான் பொறுத்தம் என்று கனவை சுமந்திருப்பார்கள் அல்லவா, இயக்குனர்கள்? அவர்களையும் சேர்த்து கதற வைக்கிறது.

அந்த மணியான பைனான்சியரை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது. இவர்தான் நந்தி. குத்துவிளக்கு எல்லாம். இவரை தாண்டிதான் உள்ளே செல்ல வேண்டும். பல நேரங்களில் இவர் சொல்வதைதான் அவரும் கேட்கிறாராம். அவ்வளவு உயர்ந்த இடத்திலிருக்கும் இவர் சொல்லிதான் இப்போது இரண்டு படங்களில் நடிக்கவே வாய்ப்பு வந்ததாம் டாப்ஸிக்கு.

ஒரு படம் சிம்பு நடிப்பது. இன்னொன்று ஜெய் நடிப்பது. இவ்விரண்டிலும் டாப்ஸியை நுழைத்த அந்த சி.இ.ஓ வுக்கு இந்த பெண்ணின் மீதிருக்கும் கிரேஸ் அப்படியே நாலைந்து வருஷத்திற்கு அப்படியே இருந்தால் என்னாவது? படத்திற்கு படம் மாறினால்தான் புதுப்புது ஹீரோயின்கள் கிடைப்பார்கள். அதனால் கடவுளே… அவர் மனசை மாற்று என்று வேண்டிக் கொள்கிறார்களாம்.

படம் எடுக்க வருகிற ஒரு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும்தான் சுற்றி சுற்றி எவ்வளவு பிரச்சனை?

Read previous post:
காதலில் விழுந்தார் விஜயலட்சுமி! உதவி இயக்குனரை மணக்கிறார்?

எறும்பு புகுந்து வருகிற சந்தாக பார்த்து தனது காதலை அங்கு ஒளித்து வைக்கிற இயல்பு நடிகைகளுக்கு உண்டு. அப்படியும் அந்த இடத்தை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பொதுவுலகத்திற்கு...

Close