கிளிய வளர்த்து பூனை கையில் கொடுத்துட்டாங்களே…

சற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்… நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன? கதறினாலென்ன?

வேறொன்றுமில்லை. செல்வராகவன் படத்தில் நடிக்கப் போகிறார் அல்லவா சிம்பு? அப்படியே இன்னொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அது உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம். முதலில் இதில் தனுஷ்தான் நடிப்பதாக இருந்தது. அப்புறம் என்ன காரணத்தாலோ பின்வாங்கிவிட்டார் தனுஷ். அதற்கப்புறம் கிருத்திகா சிம்புவுக்கு கதை சொல்ல, அவரும் சரி… என்று சம்மதித்து, கிருத்திகா கேட்ட தேதிகளில் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

இந்த நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று லிஸ்ட் போட்டால், முன்னணி நடிகைகள் பலர் நான் ரெடி நீ ரெடி என்று முன் வந்தாலும் ஏனோ கடைசி நேரத்தில் தயங்கவும் செய்தார்களாம். அதற்கு காரணம், அவருடன் நடித்தால், படு பயங்கரமான கிசுகிசுக்களில் சிக்க நேரிடும் என்பது ஒன்று. இன்னொன்று அந்த படம் எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியும். ஆனால் எப்போது முடியும் என்பது சிம்புவுக்கே தெரியாதே? அதனால் அவர்கள் பின்வாங்க, கடைசியாக ஒப்புக் கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன்.

கடந்த பல மாதங்களாகவே சிரிப்பதில்லை. கலகலப்பாக இருப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கும் லட்சுமிமேனன், கிட்டதட்ட ஒரு பெண் சிம்பு போலவேதான் நடந்து கொள்கிறார். இவருக்கும் அவருக்கும் பொருத்தம் அமைந்தால், நடிக்கட்டுமே? ஆனால் ஒன்று, ஊர் உலகத்தின் மொத்த கண்களும் யூ ட்யூப் அப்டேஷனுக்காக காத்துக்கிடக்கும். அவங்களை ஏமாத்திரக் கூடாது. அவ்ளோதான்!

Read previous post:
டாப்ஸிக்கு கால்ஷீட் தந்தால் பைனான்ஸ் ரெடி! சிஇஓ வின் சீப் அப்ரோச்!

ஒரு நடிகையை ஒருவருக்கு பிடித்துப் போக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அல்லது ஒரே ஒரு காரணம் கூட இருக்கலாம். ஆனால் டாப்ஸியை அவருக்கு பிடித்துப் போக எத்தனை...

Close