விஜய், சமந்தா, நயன்தாரா வீடு அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை!
பொதுவாகவே ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியாகிற சமயங்களில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அஜீத்தின் என்னை அறிந்தால் வெளிவருவதற்கு முதல் நாள் கூட, அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் அதிகாரிகள் சமயம் பார்த்து உள்ளே நுழைவது ஒன்றும் புதுசு இல்லை.
விஜய்யின் புலி படம் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்று அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது வரிமான வரித்துறை. இவர் மட்டுமல்ல, சமந்தா, நயன்தாரா ஆகியோரது ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் இல்லங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
சமந்தாவும் நயன்தாராவும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, விஜய் வீட்டில் நடைபெறும் சோதனையில் அரசியல் பின்னணி ஏதும் உள்ளதா என்கிற கோணத்திலும் கவனித்து வருகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
This foolish actor Vijay. He is cheating our Tamil people.
Puli wash out movie of this year.,