அழிந்த கண்டம்! பீரியட் பிலிம்! எப்படி வந்தார் ஜெயம்ரவி?

பிள்ளை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? என்று ஜெயம் ரவி குறித்து ஆச்சர்யப்படுகிறது சினிமாவுலகம்! காரணம்? சமீபத்தில் தமிழ் திரையுலகத்தின் மிகப்பெரிய வெற்றி தனி ஒருவன் திரைப்படம்தான். அதே போல சமீபத்தில் திரையுலகத்தின் மிகப்பெரிய தோல்வி ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம்தான். அந்தப்பட ஹீரோ ஜெயம் ரவியும், இந்தப் பட இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் புதிய படத்தில் இணைகிறார்கள். அதெப்படி?

வேறொன்றுமில்லை. இவர் அப்பாவும் அவர் அப்பாவும் நல்ல நண்பர்கள். “தம்பி… நீ ஏ.எல்.விஜய் டைரக்ஷன்ல நடிக்கணும்ப்பா…” என்று அப்பா சொல்ல, “அதுக்கென்ன, செஞ்சுட்டா போச்சு” என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. இப்ப சொல்லுங்க, பிள்ளை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

இருந்தாலும் இந்த கதை ஜெயம் ரவியை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டதாம். லெமூரியா கண்டம் என்றொரு கண்டமே திடீரென அழிந்ததல்லவா? அப்படி அழிந்த கண்டத்திலிருந்து தப்பித்த வந்த ஒருவனாக நடிக்கிறாராம் ஜெயம் ரவி. கிராபிக்ஸ் காட்சிகள், மிரட்டல் ஒப்பனைகள் என்று விஜய் மதராச பட்டிணத்தில் எடுத்த புகழை மீண்டும் எடுக்க நினைத்திருக்கிறார் . அதில் ஜெயம் ரவியும் பங்கு கொள்வதற்கு அப்பாக்கள் ஆசைபட்டிருக்கிறார்கள்.

தப்பென்ன இருக்கு? ஜமாய்ங்க பிள்ளைகளா!

1 Comment
  1. aadhu says

    வெளங்கிடும்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விக்ரம் ஏ.எம்.ரத்னம் கூட்டு? ஆரம்ப நிலையிலேயே அவுட்டு!

நல்ல இயக்குனர்கள் எங்கிருந்தாலும், “நம்ம கம்பெனிக்கு வந்துட்டு போங்க” என்பார் ஏ.எம்.ரத்னம்! அவர் தேர்வு சொதப்பாது என்பது ஒரு புறம் இருக்க, ஏ.எம்.ரத்னம் கம்பெனியில் கமிட் ஆகிட்டா,...

Close