மச்சினிச்சி மட்டும் இருந்தா ஆம்பளைக்கு புடிக்கும்.. பிரசாந்த் படத்தில் விவகாரமான வரிகள்

பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக இசையமைப்பாளரும் முன்னணி பாடகருமான ஷங்கர் மஹாதேவன் பாடிய பாடல் மும்பையில் பதிவாகியது. பாடலாசிரியர் கபிலன் எழுதிய

“பட்டுசேலை வாங்கி தந்தா
பொம்பளைக்கு புடிக்கும்
அத கட்டி உட சொல்லி கேட்டா
ஆம்பளைக்கு புடிக்கும்…

பைக்கு பின்ன போறதுன்னா
பொம்பளைக்கு புடிக்கும்…
வழியில ஸ்பீட் பிரேக்கர் வந்தாக்கா
ஆம்பளைக்கு புடிக்கும்

மாமியாரு இல்லா வீடு
பொம்பளைக்கு புடிக்கும்
அங்க மச்சினிச்சி மட்டும் இருந்தா
ஆம்பளைக்கு புடிக்கும்…”

புடிக்கும் புடிக்கும் புடிக்கும்…

என இளசுகளை கவர்ந்து இழுக்கும் வண்ணம் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கனவே ஷ்ரேயா கோஷல் மும்பையில் பாடி பதிவானது. இப்போது சாஹசம் படத்தில் பிரஷாந்த் பாடும் வரிகளை ஷங்கர் மஹாதேவன் பாடியது மிகச்சிறப்பாக வந்துள்ளது. நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் ஏற்கனவே இன்றைய இளசுகளின் இசை சுனாமியாக திகழும் அனிருத் மற்றும் நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோரை பாட வைத்துள்ளார்.

மும்பையில் ஷங்கர் மஹாதேவன் பாடல் பதிவாகும்போது உடனிருந்த பிரஷாந்த் உற்சாக மிகுதியில் ரிக்கார்ட்டிங் தியேட்டரிலேயே மகிழ்ச்சியோடு ஷங்கர் மஹாதேவனை கட்டித் தழுவி பாராட்டினாராம்.

தமன் சாஹசம் படத்திற்காக கடினமாக உழைத்து ஐந்து அற்புதமான பாடல்களை பதிவு செய்துள்ளதாகவும், இது பிரஷாந்தின் சாஹசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் தமனை தியாகராஜன் பாராட்டினார். தமன் இசையமைத்த 5 பாடல்களிலும் எது சிறந்த பாடல் என முடிவு செய்வது சிரமமான விஷயம் என கூறினார் தியாகராஜன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘என் கதையை திருடிட்டாங்க… ’ அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கும் சிக்கல்?

‘இனிமே யாராவது இப்படி கௌம்பி வந்தீங்க? அவ்ளோதான்...’ என்று விஜயகாந்தின் நாக்கை இரவல் வாங்கிக் கொண்டு துருத்த ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘கதை திருட்டு குற்றம் சாட்டுகிறவர்களுக்கு எதிராக...

Close