நடுவுல கொஞ்சம் துட்டு காணும்… உதயநிதி-காஜல் போட்ட ட்ராமா?

நாற்பது லட்சம் என்பது உதயநிதியின் அந்தஸ்துக்கு பெரிய பணமில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றுகிற அளவுக்கு காஜல் ஒன்றும் விவரம் புரியாதவரும் அல்ல. அப்புறம் எப்படி வந்தது இழுபறி? கொடுக்கல் வாங்கலில் கோக்குமாக்கு? இப்படி ஓராயிரம் கேள்விகளோடு உள்ளே புகுந்து விசாரித்தால், நடுவுல கொஞ்சம் துட்டு காணுமாம். அதை நேரடியாக விசாரித்தால் சரி வராது. இப்படி ‘பிராது’ கொடுத்தால் பூனை தானாக வெளியே வந்துவிட்டு போகிறது…? என்று நினைத்தாராம் உதயநிதி. அதன் விளைவாகதான் காஜல் மீது கம்ளைன்ட்.

‘உங்க படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு தரல. அதனால், நீங்க எனக்கு கொடுத்திருந்த உங்க அட்வான்ஸ் பணத்தை எப்ப வேணும்னாலும் வாங்கிக்கலாம் என்று அப்பவே சொல்லிவிட்டாராம் காஜல். அதோடு விட்டாரில்லை. ‘எப்போது வாங்கிக்கிறீங்க?’ என்று தொடர்ந்து நச்சரித்துக் கொண்டேயிருந்தாராம். ஒரு கட்டத்தில் அவர் திருப்பி தருவதாக சொன்ன அமவுண்டுக்கும், உதயநிதி கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகைக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்ததாம்.

‘அவ்வளவு கொடுத்தேனே…’ என்று இவர் ஒரு தொகையை சொல்ல, ‘இவ்வளவுதான் வந்து சேர்ந்துச்சு’ என்று காஜல் ஒரு தொகையை சொல்ல, நடுவில் ‘ஸ்வாகா’ செய்த அந்த புண்ணியவான், வேறு யாருமல்ல. காஜலின் மேனேஜர்தான்! பழகுன மனுஷன். நம்ம கூப்பிட்டு கேட்டா நல்லாயிருக்காது. பிரச்சனையை பஞ்சாயத்துக்கு கொண்டு வந்திருவோம். அப்புறம் வரும் பாருங்க உண்மை என்று பேசி வைத்துக் கொண்டுதான் அடுத்த கட்டத்திற்கு போனார்களாம் இருவரும்.

நாமக்கட்டி சின்னதுதான். நெற்றிய காட்டிய யானைதான் ரொம்ப ரொம்ப பெருசு!

Read previous post:
விஜய்யோட டான்ஸ் பிடிக்கும்! பாராட்டிய பிரபுதேவா

இப்போதிருக்கும் எல்லா நடன மாஸ்டர்களுக்கும் மாஸ்டர் நம்ம பிரபுதேவாதான். அவரது ஸ்டைலில்தான் இன்று ‘சுளுக்கெடுக்கிறார்கள்’ அத்தனை பேரும்! ஆனால் இந்த பெரிய தல... இப்போது வெறும் நடன...

Close