ஃபுட் பாய்சன் காரணமாக மருத்துவமனையில் கமல் அனுமதி
நடிகர் கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மற்றும் ஆர்னாலுடன் கமலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாளிதழ்களில் கமலும் கலந்து கொள்வதாக செய்திகள் வந்தன. ஆனால் அவர் வரவில்லை. படப்பிடிப்புக்காக தென்காசியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இன்று காலை அவர் அப்போலோவுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக கமலின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார். இன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
Think aascar ravichandran did not invite him to the function. kamal got admitted into the hospital to save his face.