கார்த்திகா அப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்! ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் தந்த அதிர்ச்சி

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் சுமார் 18 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார் ஏகாம்பரம். ‘புறம்போக்கு’ அவரது ஒளிப்பதிவில் வந்திருக்கும் லேட்டஸ்ட் படம். இனி வரவேண்டிய படங்களும் லிஸ்ட்டில் இருக்கின்றன. ‘இயக்குனரின் கண்கள்னா அது ஒளிப்பதிவாளர்தான். எஸ்.பி.ஜனநாதன் படங்களில் எப்போதும் நான் இருப்பேன். இயற்கை, ஈ வரிசையில் பேராண்மையும் அமைந்திருக்க வேண்டியது. அந்த நேரம் நான் கந்தசாமி படம் பண்ணிட்டு இருந்தேன். எனக்காக இரண்டு மாதங்கள் ஜனநாதன் சார் காத்திருந்தார். ஆனால் அப்பவும் நினைச்ச மாதிரி கந்தசாமி முடியாமல் போனதால், அந்த படம் மட்டும் என்னால பண்ண முடியல’ என்று பேச ஆரம்பித்தார் ஏகாம்பரம்.

அவரைப் பொறுத்தவரை புறம்போக்கு பெரிய அனுபவம். ‘முதல்ல ஆர்யா போர்ஷனைதான் ஷுட் பண்ண ஆரம்பிச்சோம். பிரமாதமா நடிக்கிறாரேன்னு என்னை அசர வைச்சார். அதற்கப்புறம் விஜய் சேதுபதி போர்ஷனை சென்னையில எடுத்தோம். பல காட்சிகளில் என்னை அசர வைச்சார். அதற்கப்புறம் கடைசியாதான் ஜெயில் செட் போட்டு ஷாம் போர்ஷனை எடுத்தோம். முதல்ல ஒன்றரை கோடி செலவுல அந்த செட்டை போட முடிவு பண்ணினோம். இது வேணும், அது வேணும்னு மெல்ல பட்ஜெட் கூடிகிட்டே போச்சு. அப்புறமும் ஒரு அரை கோடி செலவு பண்ணி அந்த செட்டை போட்டோம். கடைசியா ஷாம் என்னை அசர வைச்சாரு’.

‘பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்த படத்தை எடுத்தாலும், செலவை குறைச்சுக்கவேயில்ல ஜனநாதன் சார். ஷாம் வந்திறங்கும் அந்த ஹெலிகாப்டர் ஷாட் எடுக்கறதுக்காக பெங்களூர் போயிட்டோம். நாங்க போயிருந்த நேரம் எலக்ஷன் டைம். எல்லா தலைவர்களும் ஹெலிகாப்டரை எடுத்துட்டு போயிட்டாங்க. வேற வழியில்லாம சில காட்சிகள் மட்டும் எடுத்துட்டு திரும்பிட்டோம். ஏகப்பட்ட செலவு. இருந்தாலும் பொறுத்துக்கிட்டாரு. மறுபடியும் அதே பெங்களுருக்கு எலக்ஷன் முடிஞ்சதும் போய் ஹெலிகாப்டர் ஷாட் எடுத்தோம். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் வாடகை. நாள் முழுக்க வச்சுருந்து எடுத்தோம்’.

‘இந்த படத்தில நானே சிரிச்சுக்கிற மாதிரி அமைஞ்ச சம்பவம்னா அது கார்த்திகாவோட மேக்கப்தான். அவங்க தன்னை அழகா காட்டிக்கணும்னு ஆசைப்பட்டாங்க. நிறைய மேக்கப் போட்டுகிட்டு வந்துட்டாங்க. அப்புறம், இல்லங்க, கதையில் நீங்க போராளி. இவ்வளவு மேக்கப் கூடாதுன்னு சொல்லி எல்லாத்தையும் கலைக்க வச்சோம். ஆனால் அதே கார்த்திகா குலுமணாலியில் நடிக்கும் போது பனியில் முகமெல்லாம் வெடிச்சுருச்சு. வேற வழியேயில்ல. முகத்துக்கு லோஷன் அப்ளை பண்ணி எடுத்தோம். அவங்க டீ குடிக்கிற அந்த ஷாட்ல மேக்கப் ஓவராகவே இருக்கும். அதுக்கு காரணம் நாங்க இல்ல. பனி வெடிப்புதான்’ என்றார் கலகலப்பாக!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்புவால் அவதி? பஞ்சாயத்துக்கு வந்த பாண்டிராஜ்- டிஆர்

நேற்று விசேஷமான நாள்! யாருக்கு என்றால் மட்டும் பதில் சொல்வது கஷ்டம். ஏன்? பிரச்சனை அப்படி சாமீய்.... ‘சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறீங்களா?’ என்று நயன்தாராகிட்டயே கேட்போம்...

Close