கத்திக்கு வந்த புது நெருக்கடி அட… இது எப்பலேர்ந்து?

நாளுக்கு நாள் நெருக்கடிதான் கத்திக்கு! ஒரு புறம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னொருபுறம் புதுப்புது முடிச்சாக விழுந்து கொண்டேயிருக்கிறது. லேட்டஸ்ட் சிக்கல் இது.

பொதுவாக விஜய் படத்தின் பாடல்கள் கலக்கு கலக்கென கலக்கும். பட்டிதொட்டியெங்கும் பரவலாக சென்று பரபரப்பாக மாஸ் கிளப்பும். தனது படத்திற்கு இசையமைப்பது யாராக இருந்தாலும், அந்த பாடல்களில் ஒரு எளிமையும் அதிரடியும் இருப்பதை போல பார்த்துக் கொள்வார் விஜய். முழு பொறுப்பும் இயக்குனர் வசம் இருந்தாலும், சில நேரங்களில் இந்த பாடல்களுக்கு அப்ரூவல் தருபவரே விஜய்யாகதான் இருப்பார். கத்தி படத்திற்கு அனிருத் இசையமைக்க வந்ததும் கூட விஜய்யின் ஆசியால்தான். போகட்டும்… நாம் சொல்ல வந்தது அதுவல்ல, வேறு.

சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆடியோ கம்பெனிகளின் மூலம் வருவாய் வருமாம் விஜய் படங்களுக்கு. இந்த முறை அது கட்! இந்த நிமிடம் வரைக்கும் பாடல் வெளியீட்டு உரிமையை வாங்க ஒரு கம்பெனியும் முன் வரவில்லை. வாங்குவதாக வாக்குறுதி அளித்த ‘சோ…’ நிறுவனமும் கடைசியில் ஜகா வாங்கிவிட்டதாம். ஏன்?

கத்தி படத்திற்கு எதிர்ப்பு கிளப்புகிறவர்கள் அரசியல் மற்றும் அதிகார பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களே, அதனால்தானாம். நம்மளே வெளியூர்லேந்து இங்க வந்து தொழில் செய்யுறோம். இவங்களை பகைச்சுகிட்டா உப்பு தண்ணிதான் குடிக்கணும். ஆளை விடுங்க என்று ஓட்டமெடுக்கிறார்களாம் அத்தனை பேரும். முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். முதல்ல நீங்க ஒரு கட்சி ஆரம்பிங்க. அப்புறம் நடக்கறதை ஃபேஸ் பண்ணுவோம் என்று சிலர் விஜய்க்கு மந்திரம் போடுகிறார்களாம்.

முள்ளை கத்தியால் எடுக்கிறாரோ, அல்லது கத்தியை முள்ளால எடுக்கிறாரோ? கத்தி பிரச்சனை சம்பந்தமா கத்தி கூட பேச முடியாத நிலைமையில்தான் இருக்கிறார் விஜய்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினேகாவின் காதலர்கள் விமர்சனம்

‘காதல், ஒருமுறைதான் பூக்கும்’ என்கிற ஒருதலை ராக சென்ட்டிமென்ட்டையெல்லாம் உடைத்து தள்ளியிருக்கிறார் அறிமுக இயக்குனர் முத்துராமலிங்கன். ‘அவனுக்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தேன்னா உன் லவ்வை ஏத்துகிட்டு இருந்திருப்பேன்’...

Close